எப்ஸ்டீன் குறித்து திடீரென பேசிய டிரம்ப் மனைவி.. அதிர்ச்சியில் டிரம்ப்.. எதிரிங்க கொடுக்கிற ஷாக்கை விட, மனைவி கொடுக்கிற இந்த ஷாக் டிரம்பை நிலைகுலைய வச்சிருக்கு.. உலகத்துக்கே அதிபரா இருந்தாலும், வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்குற டிரம்ப் நிலைமை ரொம்ப பரிதாபம் தான்..

அமெரிக்க அரசியலில் எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதற்கு சான்றாக, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

Melinia

அமெரிக்க அரசியலில் எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதற்கு சான்றாக, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை தன்னை நிலைகுலைய செய்துவிட்டதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மெலனியா கேமரா முன்னால் தோன்றி உரையாற்றும் வரை, அவர் இப்படி ஒரு விளக்கத்தை அளிக்கப்போகிறார் என்பது தனக்கு தெரியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தனக்கு இருந்த தொடர்புகள் குறித்து மெலனியா டிரம்ப் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றினார். சமீப காலங்களில் மெலனியாவுக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த புதிய ஆதாரங்களும் வெளிவராத நிலையில், அவராக முன்வந்து இத்தகைய விளக்கத்தை அளித்தது வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “நான் எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்ட நபர் அல்ல; எப்ஸ்டீன் என்னை டொனால்ட் டிரம்பிற்கு அறிமுகப்படுத்தவில்லை. 1998 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த ஒரு விருந்தில் எதேச்சையாகவே என் கணவரை சந்தித்தேன்” என்று மெலனியா ஆவேசமாக தெரிவித்தார்.

மெலனியாவின் இந்த திடீர் விளக்கத்தால் அதிர்ச்சியடைந்த அதிபர் டிரம்ப், இது குறித்து தனக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், மெலனியாவுக்கு எப்ஸ்டீனை தெரியாது என்றும் ஊடகவியலாளரிடம் கூறினார். மேலும், எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் தொடர்பான கோப்புகளில் மெலனியாவின் பெயர் இடம்பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சல் தகவல்களையும் அவர் மறுத்தார். நியூயார்க் மற்றும் பாம் பீச் சமூக வட்டாரங்களில் எப்ஸ்டீனை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அவர்களுக்கிடையே எந்த தனிப்பட்ட நட்பும் இல்லை என்றும் மெலனியா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிருப்தியடைந்த டிரம்ப், மெலனியாவுக்கு அவரை தெரியாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு பேட்டியைப் பாதியிலேயே முடித்துக்கொண்டார். வெள்ளை மாளிகைக்குள்ளேயே தம்பதியினருக்கு இடையே போதிய தகவல் பரிமாற்றம் இல்லையா அல்லது திட்டமிட்டு மெலனியா இப்படி செய்தாரா என்ற கேள்விகள் தற்போது அமெரிக்க அரசியலில் விவாத பொருளாகியுள்ளது.

எப்ஸ்டீன் விவகாரத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த மர்மங்களுக்கு மெலனியா முற்றுப்புள்ளி வைக்க முயன்றாரா அல்லது இது ஏதேனும் புதிய சர்ச்சையின் தொடக்கமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.