இந்தியாவை பொருத்தவரையில் எந்த பகுதியில் ஒரு திருமணம் அல்லது வீட்டில் ஏதாவது விசேஷ நிகழ்ச்சி நடந்து விட்டாலோ உடனடியாக அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் கையில் மெஹந்தி போடத் தொடங்கி விடுவார்கள். தமிழில் இதனை மருதாணி என குறிப்பிடும் சூழலில் தற்போது வட மாநிலங்களில் பல பகுதிகளில் மெஹந்தி என்ற ஒரு விஷயத்திற்காக தனி நிகழ்ச்சி மிக கோலாகலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் தற்போது பல இடங்களில் மருதாணிக்கு என்று தனியாக திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் சூழலில், ஆட்டம் பாட்டத்துடன் மிக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தரையில் நாம் அரிசி மாவு மூலம் கோலம் போடுவது போல கையிலும் விதவிதமான டிசைன்களை மெஹந்தி மூலம் வடிவமைத்து அதன் அழகை இன்னும் மெருகூட்டச் செய்வது பெண்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக உள்ளது.
மெஹந்தியில் வலியை சொன்ன பெண்
இதனால் எந்த திருமண நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளிலும் பல பெண்கள் கையில் மருதாணி அணிந்து வலம் வருவதை நம்மால் பார்க்க முடியும். பொதுவாக மருதாணி போடுவது என்றால் அது அதன் மூலம் பல சாதாரணமான டிசைன்களை தான் நம்மால் பார்க்க முடியும். ஆனால் அதில் பெரும்பாலும் நெகிழ்ச்சியான விஷயங்கள் இடம்பெற்றிருக்க, பிரபல மெஹந்தி கலைஞரான பெண் ஒருவர் தனது கையில் தானே வடிவமைத்த டிசைன் ஒன்று அவரது வாழ்க்கையில் சந்தித்த வலிகளை மிக மோசமாக எடுத்துரைத்த வீடியோ தற்போது பலர் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோவின் படி, ஊர்வசி என்ற பெண் ஒருவர் மெஹந்தி கலைஞராக இருப்பதாக தெரிகிறது. இவர் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை தனது கையிலே மெஹந்தியாக வடிவமைத்துள்ளார்.
மனமுருக வைத்த வீடியோ
ஆரம்பத்தில் தங்கள் திருமணம் செய்து கொண்டதை குறிக்கும் மெஹந்தியும் அதன் கீழ் அவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷம் இல்லாமல் அடிதடி நடந்து கொண்டிருந்ததையும் தனது கணவரின் குடும்பத்திலிருந்து யாரும் தனக்கு ஆதரவு தராமல் வேலைக்காரியை போல நடந்து கொண்ட விஷயங்களையும் அவர் மெஹந்தி மூலமே எடுத்துரைக்கும்படி வடிவமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கணவனுடன் அடிக்கடி ஏற்படும் தகராறுகள் மற்றும் அவர் எந்த விஷயத்திலும் தனக்கு ஆதரவாக இல்லாதது பற்றியும் புகைப்படமாக மெஹந்தி மூலம் விளக்கி உள்ள அந்த பெண் கடைசியில் விவாகரத்து பெற்று விட்டதையும் குறிப்பிட்டுள்ளார். மெஹந்தி என்றாலே நல்ல ஒரு நிகழ்ச்சிக்கான விஷயமாக இருந்து வரும் நிலையில் அதன் மூலம் தனது வலியையும் எடுத்துரைத்த இந்த பெண்ணின் மெஹந்தி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.