ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத நிலையில் வெறும் 500 ரூபாயுடன் அமெரிக்க சென்றவர் இன்று அவருக்கு 47 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி திவி. இவரது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு ஊழியராக இருந்த நிலையில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 1976 ஆம் ஆண்டு பிளஸ் 2 என்று கூறப்படும் அன்றைய பியுசி தேர்வில் தேர்ச்சி பெறாத முரளி திவி அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அவர் தனது 25 வது வயதில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும்போது அவரது பாக்கெட்டில் 500 ரூபாய் மட்டுமே இருந்தது.
அமெரிக்கா சென்ற அவர் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அதன் பிறகு சில ஆண்டுகளில் அவரே ஒரு கெமிக்கல் நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 1984 ஆம் ஆண்டு 40,000 அமெரிக்க டாலர்களுடன் இந்தியா திரும்பினார். ஆனால் எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை. 1984 ஆம் ஆண்டில், திவி அஞ்சி ரெட்டியுடன் கைகோர்த்து ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைக்கப்பட்டது. இதன் பிறகு அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்பதும் தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 46 ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது.
தற்போது முரளி திவி உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் என்பதும் அவரது விடா முயற்சி மற்றும் கடுமையான உழைப்பே அவரது இந்த வெற்றிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.