ஒருவர் கஷ்டப்பட்டு சேமித்த பணம் ஒரே நாளில் காலியாகிறது என்றால் அது கண்டிப்பாக மருத்துவ செலவாக தான் இருக்கும் என்பதால் மருத்துவ பாலிசி எடுக்கும் பொது மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் நாம் மருத்துவ பாலிசி எடுக்கும்போது உள்ள பாலிசி தொகை கடைசி வரைக்கும் இருக்குமா என்றால் அதில் சில பிரச்சனைகள் உள்ளது.
பொதுவாக மருத்துவ பாலிசி 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு பாலிசி பிரீமியம் தொகை மாறாது. ஆனால் அதே நேரத்தில் 35 வயதுக்கு பிறகு ஒவ்வொரு ஐந்து வருடமும் ஒரு குறிப்பிட்ட அளவு பாலிசி பிரீமியம் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சட்ட திட்டத்திற்கு ஏற்றவாறு பிரீமியம் தொகை அதிகரிப்பு என்பது வேறுபாடு இருக்கும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் இவற்றைத் தவிர வேறு பெருமையும் தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மருத்துவ பாலிசியில் இழப்பீடு பெற்று இருந்தாலும் பிரீமியம் தொகை மாறாது. சிலர் இழப்பீடு பெற்றால் அடுத்த வருடம் பிரீமியம் தொகை உயருமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 35 வயது மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் தொகை ஏறும் என்பதும் இழப்பீடு பெற்றதால் பிரீமியம் தொகையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.