பெரும்பாலான மருத்துவ காப்பீடுகளில் பிரசவத்திற்கு கிளைம் ஆகாது என்பதுதான் விதியாக உள்ளது. ஆனால், பிரசவ காலத்திற்கு பயன்படும் வகையில் சில காப்பீட்டுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நிவா பூபா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆஸ்பயர் என்ற பெயரில் ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இளம் தம்பதிகளை அதிக அளவில் காப்பீடு எடுக்க வைக்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
புதிதாக திருமணமானவர்கள் இந்த காப்பீட்டை எடுத்தால், பிரசவ கால மருத்துவ சிகிச்சை, கருத்தரிக்கும் போது தேவைப்படும் ஐவிஎஃப் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கும் கிளைம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மருத்துவ காப்பீட்டுடன் பிரசவ கால சிகிச்சைக்கும் கிளைம் செய்ய வேண்டும் என்றால், இளம் தம்பதிகள் நிவா பூபா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆஸ்பயர் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.