ட்விட்டரில் முதல் முறையாக ஹேஷ்டேக்கை பயன்படுத்தலாம் என்ற ஐடியா கொடுத்தவர் தற்போது ட்விட்டரில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் பயனாளர்கள் ஏராளமானோர் ஹேஷ்டேக் பயன்படுத்துவார்கள் என்பதும் இந்த ஹேஷ்டேக் மாநில அளவில் தேசிய அளவில் உலக அளவில் வைரல் ஆகும் என்பது தெரிந்தது
பிரபலமான நிகழ்வு அல்லது திரைப்படம் அல்லது நடிகர்கள் குறித்து ஹேஷ்டேக் பதிவு செய்வது உலகம் முழுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் ஹேஷ்டேக் என்ற முறையை முதல் முதலில் பயன்படுத்தியவர் கிரிஸ் மெசினா என்று கூறப்படுகிறது. இவர்தான் முதன்முதலில் ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் இந்த ஹேஷ்டேக் வைரலாகும் என்பதை கண்டுபிடித்து அதை நடைமுறைப்படுத்தினார்.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் மாற்றி கிறிஸ் மெசினா தற்போது ட்விட்டரில் இருந்து திடீரென விலகி உள்ளார். ட்விட்டரில் ஹாஸ்டேக் கண்டுபிடித்த கிறிஸ் மெசீனா குறித்து எலான் மஸ்க் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகவும் இதனை அடுத்த அவர் டுவிட்டருக்கு குட்பை சொல்கிறேன் என்று அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என பலர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு ட்விட்டரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பதும் இதையடுத்து தற்போது ட்விட்டரில் ஹேஷ்டேக் கண்டுபிடித்தவர் ட்விட்டரில் இருந்து வெளியேறி இருப்பது பயனாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் வேறு என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
