விவாகரத்தானவர்கள் தான் டார்கெட்.. ரிசர்வ் வங்கி அதிகாரி என கூறி  40 பெண்களிடம் மோசடி..

மேட்ரிமோனியல் இணையதளத்தில் போலியான அக்கவுண்ட்கள் ஆரம்பித்து சுமார் 40 பெண்களிடம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த அகமது நியாஸ் என்பவர் திருமண மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன்னை ரிசர்வ் வங்கி…

fraud

மேட்ரிமோனியல் இணையதளத்தில் போலியான அக்கவுண்ட்கள் ஆரம்பித்து சுமார் 40 பெண்களிடம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த அகமது நியாஸ் என்பவர் திருமண மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன்னை ரிசர்வ் வங்கி அதிகாரி என்றும் டாக்டர் என்றும் கூறி ஏராளமான பெண்களை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் பல பெயர்களில் அக்கவுண்ட்களை உருவாக்கி அதில் தன்னை ரிசர்வ் வங்கி அதிகாரி டாக்டர் என குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் பணக்கார பெண்களை கவரும் வகையில் பேசி இருக்கிறார். பின்னர் அவர்களுடைய நம்பிக்கையை பெற்ற பிறகுதான் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இவரது டார்கெட் 30 முதல் 40 வயது உள்ள விவாகரத்துக்கான பெண்கள் தான். அப்படிப்பட்ட பெண்கள் தான் அன்புக்காக ஏங்குவார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் அன்பு செலுத்துவது போல நடிப்பார். அதன் பிறகு உறவினரின் திருமண விழாவிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுப்பார். அப்போது வாஷ் ரூம் செல்ல வேண்டும் என்று பெண்கள் கூறியபோது நகைகளை கொடுத்து விட்டு போங்கள் என்று கூறி நகைகளுடன் எஸ்கேப் ஆகிவிடுவார்.

அதேபோல் அழகு நிலையங்களுக்கு வரும்படி பெண்களிடம் அழைப்பு விடுப்பார். அப்போது   அழகு நிலையங்களில் உள்ளே செல்லும்போது நகைகளை கழட்டி கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறுவார். அதே போல அவர்கள் நம்பிக்கை உடன் நகைகளை கொடுத்த நிலையில் திரும்பி வந்து பார்க்கும்போது அவர்கள் அந்த நபர் தலைமறைவாகி இருப்பார்.

இதேபோன்று சுமார் 40 பெண்களிடம் அவர் ஏமாற்றிய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஆடம்பர கார் உள்பட பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மேட்ரிமோனியல் மூலம் பழகும் நபர்களிடம் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.