சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் ரோகினி கேரக்டரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வரும் தங்கமயில் கேரக்டரும், தங்களுடைய குடும்பத்தில் ஏராளமான பொய்களை சொல்லி சமாளித்து வரும் நிலையில், அதைவிட அதிகமாக தன்னுடைய காதலி பொய் சொல்லி இருப்பதாக ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 வயது இளைஞர் ஒருவர், தனது சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு வயது 21 என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென அவர் பாஸ்போர்ட்டைப் பார்த்த போது, அந்த பெண் தன்னைவிட 21 வயது மூத்தவர் என்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர், ‘என்னைவிட ஐந்து வயது குறைவானவள் என்று நினைத்துப் பழகினேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அந்த பெண் என்னைவிட 21 வயது அதிகம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவளுடைய பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பார்த்தபோது, அவர் ஏற்கனவே கர்ப்ப சோதனை செய்யப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
அந்த இளைஞர் கூறுகையில், ‘அவளுக்கு முன்பாக ஓர் உறவு இருந்ததாக ஒருபோதும் என்னிடம் கூறவில்லை,’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெரும்பாலான சமூக வலைத்தள பயனர்கள், ‘அந்த பெண்ணுடன் உறவை உடனே துண்டித்துக் கொள்ளுங்கள்’ என்றும், ‘திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பொய்கள் கூறியவர், நாளை கர்ப்பத்திற்கு உங்களை காரணம் என்று சொல்லிவிட்டால் ஆச்சரியமில்லை’ என்றும் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
‘பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, காதலில் முதலில் உண்மை வேண்டும். அந்த உண்மை இல்லாவிட்டால் அது காதலே இல்லை,’ என்று பலர் கூறியுள்ளனர். ‘நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், உடனடியாக அந்த பெண்ணை விட்டு விலகிவிடுங்கள்’ என்ற அறிவுரைகளும் வந்துள்ளன. ‘அப்படித்தான் செய்யப் போகிறேன்’ என்று அந்த இளைஞரும் பதில் அளித்துள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், ரோகினி தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக கர்ப்பமாகி, குழந்தை பெற்றதை மறைப்பதோடு மட்டுமின்றி, ‘நான் கோடீஸ்வரர் வீட்டு பெண்’ என்று அடுக்கடுக்காக பொய்கள் கூறி, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்திடம் ஏமாற்றினார். அதேபோல், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் உள்ள தங்கமயில் கேரக்டர், ‘தான் எம்ஏ படித்திருக்கிறேன்’, ‘ஏராளமான நகைகள் வைத்திருந்தேன்’ என பலவிதமான பொய்களை கூறியுள்ளார்.
இந்த இரு கேரக்டர்களின் பொய்களைவிட, ‘உங்கள் காதலியின் பொய்கள் அதிகமாக இருக்கின்றன’ என்ற கமெண்ட்ஸும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.