லிங்க்ட்இன் என்ற சமூக வலைதளம் வேலைவாய்ப்புக்கான தளம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், 25 வயது இளைஞர் ஒருவர் அது லட்சக்கணக்கில் வருமானம் தரும் தளம் என நிரூபித்து காட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்டென்ட் ரைட்டராக இருந்த 25 வயது சாப்மேன் என்பவர் இரண்டு முறை வேலை நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, மாற்று வழியில் வருமானம் தேட முயற்சித்துக் கொண்டிருந்தபோதுதான், கடந்த 2023 ஆம் ஆண்டு, LinkedIn thought leader என்ற பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 16,000 ஃபாலோயர்களை கொண்ட இவர் உடனே அந்த பணியில் சேர்ந்த நிலையில், அவருக்கு புதிய முயற்சியாக வருமானம் கூட்டத் தொடங்கியது.
இவரது வீடியோக்கள் மற்றும் பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்களை பெறுகின்றன. இதன் காரணமாக, அவர் தன்னுடைய கார்ப்பரேட் வேலையை விட்டு விட்டதாக கூறுகிறார். “லிங்க்ட்இன் என்பது ஒரு வேலைவாய்ப்பு தளமல்ல. அது டிக் டாக்கை விட சிறந்த வருமான கட்டமைப்பை உருவாக்குகிறது,” என்று கூறிய அவர், “நாம் இப்போது கிரியேட்டர் எக்கானாமியில் இருக்கிறோம். தனிநபர் பிராண்டுகளை எப்படி பயன்படுத்தி வருமானம் உருவாக்குவது என்பதை கண்டுபிடித்த பிறகுதான் எனக்கு லிங்க்ட்இன் மூலமும் சம்பாதிக்கலாம் என்ற உண்மை தெரிந்தது,” என தெரிவித்தார்.
லிங்க்ட்இனில் வருமானம் பெற பல வழிகள் உள்ளன என்றும், “தற்போது என்னுடைய முக்கிய வருவாய் பிராண்டுகளின் கூட்டாண்மை. குறிப்பாக, டெக் நிறுவனங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்துவது மற்றும் விற்பனைக்கு உதவுவது என ஆகிவிட்டது. இதில் முழு கவனம் செலுத்தினால் மிகப் பெரிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் சொன்ன பிறகுதான், “லிங்க்ட்இன் என்பது வேலைவாய்ப்பு தளம் அல்ல, அதிலும் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கலாம்,” என்ற உண்மை பலருக்கு புரிய வந்துள்ளது.