லைப் இன்சூரன்ஸ் பாலிசி என்ற பெயரில் அதிக பயன் இல்லாத இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து எந்த விதமான பயனும் நமது குடும்பத்திற்கு ஏற்படுவதில்லை. என்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி ஆகியவற்றில் பாலிசி கட்டணம் அதிகம் இருக்கும் என்பதும், சந்தையின் போக்கை பொறுத்து சில சமயம் பாலிசியின் பலன் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை பாலிசிகளை ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிட்டு, முழுக்க முழுக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் என்ற ஒரே ஒரு பாலிசி மட்டும் எடுத்தால் போதுமானது. ஒரு குடும்பத்தில் அதிகமான வருமானம் யார் பெறுகிறாரோ, அவரது பெயரில் மட்டும் ஒரு பாலிசி எடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு பாலிசி எடுக்காமல் இருந்து விடலாம்.
டேர்ம் இன்சூரன்ஸ் பொருத்தவரை, ஒரு கோடி ரூபாய்க்கு 30 வயதான ஒருவர் எடுக்க வேண்டும் என்றால் 15,000 முதல் 20000 ரூபாய் வரை மட்டுமே பிரிமியம் கட்ட வேண்டி இருக்கும். ஆனால், அந்த நபருக்கு எதிர்பாராத வகையில் ஏதாவது ஆகிவிட்டால், ஒரு கோடி வரை அவரது குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ஒரு கோடிக்கு மற்ற வகை பாலிசிகள் எடுத்தால், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை பிரிமியம் கட்ட வேண்டி வரும். ஆனால் இதில் வெறும் 15 ஆயிரம் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும்.
இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பாலிசி எடுத்த நபர் பாலிசி காலம் வரை உயிரோடு இருந்தால் அவர் கட்டிய பணத்திலிருந்து ஒரு பைசா கூட வராது என்பதுதான். ஆனாலும், பரவாயில்லை, திடீரென எதிர்பாராத விதமாக ஒரு குடும்பத்தில் வருமானம் பெறுபவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்பதும், அவரது குடும்பம் நிதி சிக்கல் இல்லாமல் தப்பித்து விடும் என்பதும் தான் டர்ன் பாலிசியின் ஒரே சிறப்பு அம்சமாகும்.