இந்த ஆண்டு ஐபிஎல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எல்ஐசி ஒன்றாக செய்திகளில் இடம்பிடித்தன. ஆனால் இது ப்ராண்டு விளம்பரம் அல்ல, சற்று வித்தியாசமான காரணம். என்னவெனில் இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு 529% லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம் CSK-வின் பட்டியலிலில்லாத ஷேர்கள் ₹31-இல் இருந்து ₹195 ஆக உயர்ந்தது!
2015-ஆம் ஆண்டு, IPL நிர்வாகக் குழுவின் உத்தரவின் பேரில் CSK, இந்திய சிமெண்ட்ஸிலிருந்து பிரிக்கப்பட்டது, தனி நிறுவனமாக CSK இயங்க தொடங்கியது. அப்போது LIC போன்ற தொடக்க முதலீட்டாளர்கள் ₹31க்கு பட்டியலிலில்லாத CSK ஷேர்களை வாங்கினர்.
காலப்போக்கில், CSK உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக மாறியது. 2024க்குள் அந்த ஷேர்கள் ₹190–₹195 வரம்பில் விற்பனை செய்யப்பட்டன, இது கிட்டத்தட்ட 529% லாபத்தை LIC-க்கு தந்தது.
இந்த 6 மடங்கு ரிட்டர்ன் LIC-க்கு கிடைத்ததும், பங்கு சந்தை நிபுணர்கள் இதை விசாரிக்கத் தொடங்கினர். இது ஒரு தெளிவான முதலீட்டு மாஸ்டர் ஸ்ட்ரோக்கா? இல்லையெனில், LIC-இன் பாதுகாப்பான முதலீட்டு பாணியில் ஒரு அதிர்ஷ்டமா? அல்லது தோனியின் பிராண்டு மதிப்பின் அலையில் ஏறிப் பறந்ததா? என விவாதங்கள் நடந்து வருகிறது.
உண்மையில் எம்.எஸ். தோனி ஒரு சாதாரண வீரரல்ல. அவர் ஒரு பொருளாதார விளையாட்டு வீரர். அவரது லீடர்ஷிப், கூல் பண்பு, ரசிகர்கள் பாசம் ஆகியவை CSK-வை வெறும் கிரிக்கெட் அணி அல்லாமல் ஒரு கலாசாரச் சின்னமாக மாற்றிவிட்டன. தோனி இல்லாத CSK அணியை நினைத்து பார்க்க கூட முடியவில்லை. LIC நிறுவனம் CSK ஷேர்களை வாங்கியதற்கு 100% தோனி தான். CSK அணியின் பார்ட்னரும் இல்லாமல், ஸ்பான்சரும் இல்லாமல் LIC நிறுவனத்திற்கு கிடைத்த இந்த லாபத்திற்கு தோனி என்ற மாயாஜால வீரர் ஒருவரே காரணம்.
CSK-வின் 529% லாபம் LIC போன்ற பாரம்பரிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்திருப்பது பிராண்டு மதிப்பு, செயல்திறன் மற்றும் உணர்வுப் பிணைப்பின் நம்பமுடியாத உதாரணமாக அமைந்துள்ளது. இவை அனைத்துக்கும் தோனி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.