சமூக வலைதளங்கள் என்பது தற்போது இன்றியமையாத ஒரு விஷயமாகி விட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் பல ஆக்கபூர்வமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் சில ஆபத்துகள் இருப்பதால், 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் இன்ஸ்டாகிராம் சிறுவர்களுக்காக, அதாவது 16 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, கணக்கு தொடங்க அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கணக்குகள், குழந்தைகளின் சமூக வலைதள ஆர்வத்தை வளர்க்க உதவும் என்றும், ஆனால் அதே சமயம், குழந்தைகள் திசை மாறாமல் இருக்க, இந்தக் கணக்குகள் 18 வயதாகும் வரை முழுமையாக பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்வதன் காரணமாக, இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிலையில், தற்போது சிறுவர்கள் மற்றும் சிறுமியர் மத்தியில் பிரபலமாக்கும் வகையில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.