தென்னிந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரான விஜய் தற்பொழுது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எங்கு திரும்பி பார்த்தாலும் இப்பொழுது லியோ கொண்டாட்டம் தான். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் அப்டேட் தான் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான லியோ டிரைலருக்கு பின் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளார். லியோ ப்ரோமோஷன்காக சில பேட்டிகளையும் லோகேஷ் கொடுத்து வருகிறார். அந்த கலந்துரையாடல் தான் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் லியோ படம் குறித்து பல கேள்விகள் லோகேஷ் இடம் கேட்கப்படுகிறது. அதில் முதல் கேள்வியாக ட்ரெய்லர் இடம் பெற்ற அந்த கெட்ட வார்த்தை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் அவர்கள் அந்த வார்த்தைக்கும் தளபதி விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த இடத்தில் அந்த வார்த்தை கூறினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பதால் தான் விஜய் அவர்களை கட்டாயப்படுத்தி அந்த வார்த்தையை கூற வைத்ததாகவும், அந்த வார்த்தையினால் ஏற்படும் விளைவுகள் என்னையே சேரும் எனவும் கூறினார்.
மேலும் லியோ ட்ரெய்லர் மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் ஆப் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் செகண்ட் ஆஃப் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். தொடர்ந்து 40 நிமிடங்கள் யாராலும் எதிர்பார்க்க முடியாத பல திருப்பங்களுடன் லியோ திரைப்படம் உருவாகி உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
சினிமா உலகில் தளபதி விஜய்க்கு போட்டியாக அஜித் என்ற காலம் கடந்து தளபதி விஜய்க்கு போட்டியாக ரஜினி என்னும் புதிய ட்ரெண்ட் தற்பொழுது தொடங்கியுள்ளது. லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தோற்கடிக்குமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தயாரிப்பாளர் லலித் அவர்கள் இயக்குனர் லோகேஷ் இடம் லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை தோற்கடிக்குமா என விளையாட்டாக கேட்டுள்ளார்.
லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ரீமேக் படமா? உண்மையை உடைத்த பிரபலம்!
அதற்கு லோகேஷ் அவர்கள் சமூக வலைதளங்களில் லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தோற்கடித்தால் தயாரிப்பாளர் இயக்குனருக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உங்களால் வாங்கித் தர முடியுமா எனக் கேட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துக்களால் இந்த உரையாடல் அவர்களுக்கு இடையே நடந்திருக்கலாம். ஆனால் நல்ல இயக்குனரிடம் இந்த படத்தின் வெற்றி அந்த படத்தின் வெற்றியை தோற்கடிக்குமா என கேட்பது தவறான முறையாகும்.
லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க இதில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு அது ஒரு பாரமாக மாறத் தொடங்கியுள்ளது. லியோ திரைப்படத்தின் வெற்றி தோல்வி ரசிகர்களின் மனநிலையை பொறுத்து அமையும் என்றாலும், பெரும்பாலும் தளபதி விஜய்யின் படம் என்றைக்குமே பிளாக் பாஸ்டர் ஹிட் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.