கிழிந்த டி ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து.. பிச்சை எடுத்த வாலிபர்.. 24 மணி நேரம் கழிச்சு செஞ்ச விஷயம்.. வீடியோ..

முன்பெல்லாம் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைய வேண்டுமென்றால் மிக கடினமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டே இருந்தால் மட்டும் தான் ஒரு அளவிலாவது கவனம் பெற முடியும். ஆனால் தற்போதெல்லாம் சமூக வலைதளத்தின்…

Young as Beggar Video

முன்பெல்லாம் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைய வேண்டுமென்றால் மிக கடினமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டே இருந்தால் மட்டும் தான் ஒரு அளவிலாவது கவனம் பெற முடியும். ஆனால் தற்போதெல்லாம் சமூக வலைதளத்தின் பயன்பாடு மிக மிக அதிகமாக இருப்பதால் ஏதாவது வித்தியாசமாக அல்லது விமர்சனத்தை வரவழைக்கக் கூடிய வகையில் எதிர்மறையான சம்பவங்களில் ஈடுபட்டும் தங்களது பெயரை மக்கள் மத்தியில் புகழ் அடைய வைக்க வைப்பதற்கான முயற்சிகளில் பலர் களமிறங்கி வருகிறார்கள்.

உதாரணத்திற்கு தகாத வார்த்தைகள் பேசி வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் அவர்களைப் பற்றிய பேச்சு மக்கள் மத்தியில் இருக்கும் என்றும் பலர் நினைக்கின்றனர். இப்படி எதிர்மறையான சிந்தனைகள் மூலம் மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் பலரும் இன்று இன்ஸ்டாகிராமில் அதிக பணம் சம்பாதித்தும் இன்னொரு பக்கம் இதை இப்படி புகழ் அடைவதை கொஞ்சமும் விரும்பாத மக்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்தும் வருகின்றனர்.

24 மணி நேர சேலஞ்ச்

ஒவ்வொரு நாளிலும் புதிதாக பலரும் இப்படி ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்து பெயரெடுத்து வரும் நிலையில் தான் தற்போது இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவும் அதிகம் வைரலாகி பல கலவையான கருத்துக்களையும் பெற்று வருகிறது. என்னதான் பல நாடுகள் தொழில்நுட்ப ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் யாசகம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

வீடும், உண்ண உணவும் இல்லாமல் பலரும் அவதிப்பட்டு மற்ற மக்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், 24 மணி நேரம் தான் பிச்சை எடுக்கப் போவதாக கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் அவர் கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி பஸ் ஸ்டாண்ட் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே பலரிடம் கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டும் சுற்றித் திரிந்துள்ளார்.

வைரலான வீடியோ

பார்ப்பதற்கு இது செயற்கையாக தெரிந்தாலும் அந்த இளைஞர் ஒரு தினத்தில் யாசகம் செய்து 34 ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பணத்தை அப்படியே அங்கிருந்த மற்ற சிலருக்கு கொடுத்திருந்த இளைஞர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரு பக்கம் அந்த இளைஞரை பாராட்டினாலும் இன்னொரு புறம் மக்கள் மத்தியில் புகழடைய இப்படி எல்லாம் செய்ய வேண்டுமா என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.