அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ.31,500 விலையில் வாட்ச் வாங்கிய ஒருவருக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய வாட்ச் அனுப்பி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பதிவுக்கு இப்படியும் ஏமாற்றுவார்களா என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூரை சேர்ந்த ஒருவர் அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ.31,500 விலையில் முன்னணி நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த வாட்ச் டெலிவரி செய்யப்பட்டவுடன் அவர் பிரித்து பார்த்தபோது ஏற்கனவே அது பயன்படுத்திய வாட்ச் போல் தெரிந்தது.
இதனை அடுத்து அந்த வாட்ச் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி விற்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் மீண்டும் தனக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடித்து அவர் அமேசான் நிறுவனத்திற்கு இது குறித்து புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகாருக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே தங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது என்றும் பழைய பொருட்களை அமேசான் கடந்த சில மாதங்களாக அனுப்புவதை ரெகுலராக கொண்டிருக்கின்றனர் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
இன்னும் சிலர் இனிமேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது பாதுகாப்பு இல்லை என்றும் நேரடியாக ஷோரூமுக்கு சென்று வாங்குவது தான் சிறந்தது என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர். உலகின் நம்பகமான நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கூறப்பட்டு வருகிறது.