விண்வெளி மிஷனில் முக்கிய கட்டுப்பாட்டு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ‘நிலா’, செயற்கைக்கோளில் HEX20, ஜெர்மன் நிறுவனமான Decubed வழங்கிய Release Actuators பொருத்தியுள்ளது. இதன் மூலம் HEX20 சாதனை செய்துள்ளது.
HEX20 நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு ஐந்து பொறியாளர்களால் தொடங்கப்பட்டது, லாயிட் ஜேக்கப் லோபஸ், அனுராக் ரேகு, அமல் சந்திரன், அஷ்வின் சந்திரன், அரவிந்த் M ஆகிய ஐவர், 2023ஆம் ஆண்டில் திருவானந்தபுரம் Technoparkல் முழுமையாக இயங்க தொடங்கியது. மேலும் குறைந்த காலத்தில் மிகுந்த முயற்சியுடன் ‘நிலா’ செயற்கைக்கோளை முழுமையாக நான்கு மாதங்களில் நிறைவு செய்துள்ளது.
இந்த மிஷனை இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அனுமதி மையம் அனுமதி அளித்த நிலையில் நிலா தனது முதல் சிக்னலை அனுப்பியது. இதன் வெற்றி காரணமாக செயற்கைக்கோள் முறையாக செயல்படத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியது.
HEX20, ISRO-வுடன் இணைந்து 50 கிலோ செயற்கைக்கோள் வரும் ஆண்டு விண்ணில் செலுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மேலும், HEX20, பல செயற்கைக்கோள்களை உருவாக்க தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் வளர்ச்சியாக அமையும்.
நிலா செயற்கைகோள் வெற்றி என்பது இந்தியாவில் தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறைக்கு ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது. HEX20 போன்ற ஸ்டார்ட் அப்கள், உலகளவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திறனை அதிகரித்து, புதிய சாதனைகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.