இதாண்டா 10 Years சேலஞ்ச்.. காதல் திருமண மேடையில் தம்பதிகள் போட்ட நடனம்.. அசர வைத்த வீடியோ..

திருமணம் என வந்துவிட்டாலே அதனை ஒரு முக்கியமான தருணமாக மாற்றுவதற்கு பல புதுமையான முயற்சிகளில் இன்றுள்ள தம்பதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பத்தினராக பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தை விட காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள்…

10 years challenge dance video

திருமணம் என வந்துவிட்டாலே அதனை ஒரு முக்கியமான தருணமாக மாற்றுவதற்கு பல புதுமையான முயற்சிகளில் இன்றுள்ள தம்பதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பத்தினராக பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தை விட காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் அந்த நேரத்தில் தாங்கள் மிக மகிழ்ச்சியாக உணர்ந்த தருணங்களை மீண்டும் ஒருமுறை திருமண நாளில் பிரதிபலித்து தங்கள் வருங்கால சந்ததிகள் இதை நினைத்து மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு ஏதாவது ஒரு வித்தியாசமான விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதன் காரணமாக சமூக வலைத்தளத்தை நாம் திறந்தாலே அதில் ஏராளமான விஷயங்கள் திருமணத்தைப் பற்றி வைரலாவதை நம்மால் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு பெற்றோர்களின் திருமணம் நடந்தது போல தங்களது திருமணத்தை நடத்த நினைப்பது, அதில் குட்டி குட்டியாக எமோஷனல் தருணங்களை உருவாக்கி இணையவாசிகளை கண்கலங்க வைப்பது என பல விஷயங்களில் புதிய தம்பதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருமணத்தில் ஸ்பெஷல் டான்ஸ்

அந்த வகையில் தான் சமீபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு புது ஜோடி தங்களது காதல் திருமணத்தின் போது செய்த நடனமும் அதன் பின்னால் உள்ள எமோஷனல் காரணமும் தற்போது அனைவரையுமே ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ஹரி மோகன் தாஸ். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த சமயத்தில் காதலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, பத்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நிகழ்ச்சியில் ஒருமுறை நண்பர்களுடன் இணைந்து ஹரி மோகன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடனடவும் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஹரி மோகன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி நடனம் ஆடினார்களோ அதே பாடலுக்கு அதே நடன அசைவுகளுடன் மீண்டும் ஒருமுறை திருமண மேடையிலேயே அவர்கள் ஆடியுள்ளனர்.
Kerala couple viral Dance

இதல்லவோ 10 Years Challenge

ஒரு கல்லூரி காலம் கடந்தாலே நண்பர்கள் பிரிந்து ஒவ்வொரு திசையிலும் போகும் சூழலில் தங்களது காதல் திருமணத்தில் அதே நண்பர்களை மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைத்து அதே நடன நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திய ஹரி மோகன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரது திருமணத்தின் டான்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 10 Years Challenge என்ற பெயரில் அத்தனை ஆண்டுகள் இடைவெளியில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனைவரும் பகிர்ந்து வைரலாக்கி வந்தனர். ஆனால் இந்த நடனத்தை பார்க்கும் இணையவாசிகள் பலரும் இதல்லவோ 10 வருட சேலஞ்ச் என வியப்புடன் குறிப்பிட்டு வருகின்றனர்.