திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு என்ன ஆச்சு? டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!

By Bala Siva

Published:

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கவிதாவின் சகோதரர் மற்றும் உறவினர் சிறையில் கவிதாவை சந்தித்ததாகவும், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறையில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிதா திடீரென டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திகார் சிறையில் கவிதா திடீரென மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து சிறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.