தவெக உறுப்பினர் அட்டையை கிழித்து அதிரடியாக வெளியேறிய வழக்கறிஞர்கள்.. காரணம் இதானா?

நடிகர் விஜய் அரசியல் அரங்கில் நுழைந்து இன்னும் முழுமையாக ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் தற்போது அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டவர்கள் அதிரடியாக உறுப்பினர் அட்டையைக் கிழத்தெறிந்து கட்சியிலிருந்து விலகிய சம்பவம் தவெக…

TVK Leaders

நடிகர் விஜய் அரசியல் அரங்கில் நுழைந்து இன்னும் முழுமையாக ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் தற்போது அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டவர்கள் அதிரடியாக உறுப்பினர் அட்டையைக் கிழத்தெறிந்து கட்சியிலிருந்து விலகிய சம்பவம் தவெக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி சினிமாவிலிருந்து ஒப்புக் கொண்ட படங்களை முடித்து விட்டு விலகி மக்கள் பணிக்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கி பதிவு செய்தார். தமிழக அரசியலில் விஜய்யின் வருகை பரபரப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து 10 மாதங்கள் கழித்து கடந்த அக்டோபர் 27-அன்று தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தினார். இதில் லட்சம் தொண்டர்களுக்கு மேல் பங்கேற்றனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய புதிதாக செயலியும் துவக்கப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்கள் இணைந்தனர். பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தற்போது களப்பணியாற்றி வருகிறார். இன்னும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த்தின் சொந்த மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து பலர் அதிரடியாக வெளியேறியுள்ளனர்.

பாலு மகேந்திராவின் கடைசி நாள்.. மாரி செல்வராஜ் கையில் பாலா கொடுத்த ஐந்து ரூபாய் நாணயம்.. பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் வழக்கறிஞர்கள் பலர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதற்கான உறுப்பினர் அடையாள அட்டையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காரைக்கால் தவெக வழக்கறிஞர் அணியில் உள்ள சில வழக்கறிஞர்கள் புதுச்சேரி மாநிலத்தில் தவெக-வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும், காரைக்கால் மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை எனவும், நாங்கள் தளபதி விஜய்காக அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால் காரைக்கால் நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை எனக் கூறி தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்து எதிர்ப்புத் தெரிவித்து தவெக-விலிருந்து அதிரடியாக வெளியேறினர்.

கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தொண்டர்கள் விலகுவது தவெக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.