கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்.. திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு

By John A

Published:

முக்கடல் சூழும் குமரிமுனை கடல் நடுவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2000-ஆவது ஆண்டின் முதல் நாளில் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் பெறுவதையொட்டி, செய்தித்துறையால் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், நேரில் வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்க உள்ளார்.அதன் விவரம் வருமாறு:

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பிரிவு1 – ஒரு அதிகாரம்
6 வயது வரையிலானவர்களுக்கு

பிரிவு 2 – 3 அதிகாரங்கள்
7 முதல் 10 வயது வரையிலானவர்களுக்கு

பிரிவு 3 – 5 அதிகாரங்கள்
8 முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு

மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

கட்டுரைப் போட்டி : தலைப்புகள்
1. கற்றலின் மேன்மைக் குறித்து திருக்குறள்
2. அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு
இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
கட்டுரைகளை தட்டச்சுச் செய்து PDF கோப்பாக அனுப்ப வேண்டும்.

ஓவியப் போட்டிகள்
பிரிவு 1 அனைத்துப் பிரிவினர்
திருக்குறளில், ஏதேனும் ஒரு குறளைக் கருப்பொருளாக கொண்டு(content) ஓவியங்கள் அமைய வேண்டும். அல்லது திருக்குறளின் நன்மைகள் குறித்து ஓவியங்கள் அமையலாம்.

பிரிவு 2 – 1ம் வகுப்பு முதல் 5 வரையிலானவர்கள்
திருவள்ளுவர் படத்தை ஓவியமாக தீட்ட வேண்டும். இரு பிரிவினரும் வரைந்த ஓவியங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்ப வேண்டும்.

குறும்படப் போட்டிகள்
திருக்குறளை மையமாகக் கொண்டு 3 நிமிடங்களுக்குள் அமைய வேண்டும்.
படைப்புகளை mp4 format ல் அனுப்ப வேண்டும்.

கவிதைப் போட்டி – அனைத்து வயதினர்
திருக்குறளின் சிறப்புக் குறித்து கவிதைகள் படைக்க வேண்டும். கவிதைகள் 16 வரிக்குள் அமைய வேண்டும்.

சுயமிப் (செல்ஃபி) போட்டி
தங்கள் பகுதியில் பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலை, அல்லது திருக்குறள் எழுத்தப்பட்ட இடங்களின் முன்பு நின்று செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும்.

போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை 18.12.2024-க்குள் வீடியோ, ஆடியோ, போட்டோ, doc, மற்றும் pdf வடிவில் tndiprmhkural@gmail.com ஈமெயில் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.