காலியாக இருக்கும் வீட்டுக்கு ரூ.1 லட்சம் கரண்ட் பில்.. சமோசா அரசு என நடிகை கங்கனா கடும் கண்டனம்..!

  பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் மற்றும் பிரபல பாலிவுட் கங்கனா ரணாவத், மணாலியில் உள்ள தன் காலியான வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் வந்ததையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேச அரசை…

kangana 1

 

பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் மற்றும் பிரபல பாலிவுட் கங்கனா ரணாவத், மணாலியில் உள்ள தன் காலியான வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் வந்ததையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேச அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள கங்கனா , முக்கிய பிரச்சனைகளுக்கு பதிலாக அரசாங்க அமைப்புகள் சமோசாவை விசாரணை செய்கின்றன என்று சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக அலை எழுந்துள்ளது. காவி நிறம் பரவியுள்ளது. ஆனால் ஹிமாச்சலப் பிரதேசத்தின் நிலைமையை காணும்போது வேதனை ஏற்படுகிறது. நான் தங்கியிராத என் மணாலி வீடு காலியாக உள்ளது. ஆனால் அந்த வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது.

இந்த அரசின் அமைப்புகள் சமோசா விசாரணையில் உள்ளன. என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வெட்கமாக உள்ளது. நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது நம் பொறுப்பு. இந்த ஆட்சியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிக்க வேண்டும்.” எனக் கங்கனா கூறினார்.

கங்கனா ஹிமாச்சல் பிரதேச அரசை ‘சமோசா விசாரணை’ என கூறியதற்கு ஒரு காரணம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் , ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான சுக்விந்தர் சிங் சுகு அரசாங்கம், முதல்வருக்காக 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து அனுப்பப்பட்ட சமோசா மற்றும் கேக்குகள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. தொலைந்து போன சமோசாவை கண்டுபிடிக்க CID வழியாக அரசு  விசாரணை மேற்கொண்டது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி, “மாநிலம் நிதிச் சிக்கலால் தளர்ந்து இருக்கும் போது, அரசு சமோசா காணாமல் போனதை விசாரிக்க அதிகம் நேரம் செலவழிக்கிறது” என்று பலர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தை தான் கங்கனா தனது பதிவில் சமோசா அரசு என எள்ளி நகையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.