உலகம் முழுவதும் கள்ளக்காதல் உறவுகளை தேடும் நபர்களுக்காக பிரதானமாக செயல்படும் டேட்டிங் தளமான ஆஷ்லே மேடிசன் (Ashley Madison), ஜூன் 2025க்கான புதிய பயனர் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் காஞ்சிபுரம், டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரிய நகரங்களையும் விஞ்சி, இந்தியாவில் கள்ளக்காதல் உறவுகளில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தின் திடீர் வளர்ச்சி:
ஆஷ்லே மேடிசனின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டு கள்ளக்காதலில் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் 17வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், இது மெட்ரோ நகரங்களை தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஆஷ்லே மேடிசன் தளத்தில் பதிவு செய்த டாப் 20 இந்திய மாவட்டங்களின் பட்டியலில் மத்திய டெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த டெல்லி-என்சிஆர் பிராந்தியம் டாப் 20 இல் ஒன்பது இடங்களை பிடித்து வலுவான இருப்பை காட்டியுள்ளது. இதில் மத்திய டெல்லி, தென்மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய ஆறு டெல்லி மாவட்டங்களும், அண்டை நகரங்களான குருகிராம், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகியவையும் அடங்கும்.
மும்பை இல்லை; ஜெய்ப்பூர், ராய்கர் திடீர் வரவு
டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தின் ஆதிக்கம் இருந்தபோதிலும், மும்பை முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. ஆனால், ஜெய்ப்பூர், ராய்கர், காம்ரூப் மற்றும் சண்டிகர் போன்ற பல்வேறு நகரங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக, காசியாபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்கள், கள்ளக்காதல் விஷயத்தில் பல பெரிய நகரங்களை விஞ்சியுள்ளன. இந்த சர்வே திருமணத்தை மீறிய உறவு மற்றும் ஒரே ஒரு துணையுடன் வாழாத உறவுகள் குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷ்லே மேடிசனின் தலைமை அதிகாரி பால் கீபிள், இந்த போக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்: “இந்த தரவு இந்தியாவில் கணக்கெடுக்கப்பட்ட பெரியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கள்ளக்காதல் உறவுகளை ஒப்புக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட கள்ளக்காதல் உறவுகளின் விகிதம் உலகளவில் அதிகமாக இருப்பதாக கூறுகிறது. இதில் இந்தியாவில் 53 சதவீதம் பேர் கள்ளக்காதல் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டனர்.
2000களின் முற்பகுதியில் நிறுவப்பட்ட ஆஷ்லே மேடிசன், “வாழ்க்கை குறுகியது. ஒரு கள்ளக்காதல் உறவு கொள்ளுங்கள்” என்ற நேரடி டேக்லைனுடன் தொடங்கப்பட்டது. கனடாவை அடிப்படையாக கொண்ட இந்த தளம் வேகமாக வளர்ந்தது,
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
