சனாதனத்தை தொட்ட.. நீ கெட்ட.. கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்குது? சனாதனத்தை பேசி பதுங்கியிருப்பவர்களை பார்த்தும் புத்தி வரலையா?

நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையின் விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் கமல்ஹாசன், “சர்வாதிகாரத்தையும், சனாதனத்தையும் வேறறுக்க வேண்டுமென்றால் அது கல்வியால்தான் முடியும்” என்று பேசியது, தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

sanathanam

நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையின் விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் கமல்ஹாசன், “சர்வாதிகாரத்தையும், சனாதனத்தையும் வேறறுக்க வேண்டுமென்றால் அது கல்வியால்தான் முடியும்” என்று பேசியது, தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து குறித்து, நெட்டிசன்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஒரு மனிதனின் உயர்வு கல்வி மூலம் தான் என்பதை இவர் புதிதாக கண்டுபிடிக்கவில்லை என்றும், அது காலம் காலமாக இருந்து வரும் உண்மை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கமல்ஹாசன் தான் கண்டுபிடித்தது போல பேசியிருப்பதாகவும், சனாதனம் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஒரு நடிகராக கமல்ஹாசனைப் பலருக்கும் பிடிக்கும். ஆனால், அரசியல் ரீதியாக அவர் தோல்வியடைந்தவர் என சுட்டிக்காட்டப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அனைத்து பொதுத் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தவர்.

தி.மு.க.வை எதிர்ப்போம் என்று ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன், இப்போது அதே தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக தன் கட்சியையே மறந்துவிட்டார் என்றும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தலைவராக இருந்தும் தி.மு.க.வின் எம்.பி. ஆனது உலகிலேயே நடக்காத கோமாளித்தனம் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

முதலில் சனாதனம் என்றால் என்ன என்பதை கமல்ஹாசன் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் அதை பற்றிப் பேச வேண்டும்” என்றும், “ஏற்கனவே சனாதனம் பற்றி பேசிய பெரிய ஆட்கள் எல்லாம் தற்போது பதுங்கி போயுள்ளனர். அவர்களை பார்த்தாவது கமல்ஹாசனுக்குப் புத்தி வரவில்லையா?” என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. வளர்ந்து வரும் இளைஞர்கள் மத்தியில் சனாதனம் குறித்து ஒரு தவறான விஷத்தை விதைப்பது நியாயமற்றது என்றும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.