இந்த நிலத்தின் பரப்பளவு, டெல்லியை விட 2.6 மடங்கு, மும்பையை விட 6.5 மடங்கு, பெங்களூருவை விட 5.3 மடங்கு, கொல்கத்தாவை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த மோசடி ஒப்பந்தத்தின் மூலம் “The United States of Kailasa” என்று அந்த நிலத்தில் முழுமையான தன்னாட்சி உரிமையும், அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் முழு அதிகாரத்தையும் பெற்றதாக கூறப்படுகிறது. ஒப்பந்தத்தின் மதிப்பு ஆண்டுக்கு 1,08,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.96 லட்சம் ரூபாய் ஆகும்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், போலிவியா அரசு இந்த ஒப்பந்தத்தை பற்றிய எந்த தகவலும் அறியாமல் இதுவரை இருந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும், பொலிவியாவின் அரசு மற்றும் அந்த நாட்டின் பழங்குடியின மக்களின் கூட்டமைப்பு, இந்த ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக செல்லாததென்று அறிவித்தது.
பொலிவியாவின் சட்டப்படி, வெளிநாட்டவர்களுக்கு அமேசான் காட்டில் நிலம் வாங்க அனுமதி இல்லை. எனவே யாரும் எந்த விதமான ஒப்பந்தத்தையும் செய்ய முடியாது” என்று பொலிவியா அமைச்சர் ஒருவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க பெண்ணால் பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நித்தியானந்தா, 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர், அவர் “The United States of Kailasa” என்ற தனி அரசை உருவாக்கியதாக தெரிவித்தார். ஆனால், அந்த தேசம் உண்மையில் இருக்கிறதா? அது எங்கு அமைந்துள்ளது? என்பதற்கு இதுவரை எந்த உறுதிபூர்வமான தகவல்களும் இல்லை.
கைலாசா நாடு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், சுய ஆட்சி உரிமையை கொண்டிருக்கிறது என்றும், பரம்பரை இந்து ஆட்சி முறைப்படி நிர்வகிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.