ஜூன் மாதம் பருவ மழை! 27 ஆண்டுக்கு பின் நடந்த அதிசயம்!

By Velmurugan

Published:

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு கல்வி வரலாற்றிலேயே ஜூன் மாதம் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவது சுதந்திர இந்தியாவில் இதுவே மூன்றாவது முறையாகும். கடைசியாக 1996 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு ஜூன் மாதம் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு மழை காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன் முறையாக 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன் பின்பு 1996 ஆம் ஆண்டு அதேபோன்று மழை பெய்து. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பெய்த மழையில் செம்பரப்பாக்கத்தில் அதிக பட்சமாக 251 மில்லி மீட்டர் மழை பதிவானது .1991 ஆம் ஆண்டு பதிவான இந்த மழை அளவு அப்போது சென்னையில் மிகக் கடும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது.

1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி இதேபோல கனமழை பெய்தது. 1996 ஆம் ஆண்டு 14ஆம் தேதி ஜூன் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. திருவள்ளூர், சோழபுரத்தில் 450 மில்லி மீட்டர், சென்னை துறைமுகத்தில் 348.3 மில்லி மீட்டரும் மழை பதிவானது .

சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்தியன் 2 படப்பிடிப்பு! லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் கொட்டி தீர்த்த பெரும் கனமழையால் அந்த ஆண்டு சென்னை தத்தளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு தற்பொழுது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.