income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்க

By Keerthana

Published:

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இதனை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் அதிகபட்சமாக ₹5000 விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்தள்ளது,

பொதுவாக கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்கும். ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம் ஆகும்.

இதேபோல உங்கள் வருமானம் ₹ 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் , வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹ 1,000 ஆகும். மேலும் கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனர். நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் கூறுகையில், கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்தனர். அந்த எண்ணிக்கை கடந்த 22ம் தேதி இரவே முறியடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும். சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிலையில் இந்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக இதுவரை வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறை தான்இருக்கும். பழைய வருமான வரி முறை வேண்டும் என்றால் மாற்றிக்கொள்ளலாம். பழைய வருமான வரி முறையில் ரீபண்ட் பெற முடியும். அதற்கு முறையான சேமிப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.