பொள்ளாச்சி சாலையில் ஜட்ஜ் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பைக் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜட்ஜ் உயிரிழந்தார். இந்த நிலையில் பைக் ஓட்டிய நபர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் நீலகிரி மாவட்ட நீதிபதி சாலையில் நடந்து சென்று கொண்ட போது வேகமாக வந்த பைக் மோதியதால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின்படி நீதிபதி மீது மோதிய பைக் ஓட்டி வந்த நபர் பைக்கை எடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீதிபதியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இதனால் பெரும் அதிர்ச்சி பெற்றுள்ளது.
பைக் ஓட்டிய நபர் நீதிபதிக்கு உதவாமல் தப்பி சென்ற சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது பெயர் வாஞ்சிமுத்து என்றும் தெரியவந்துள்ளது.
அவர் தற்செயலாக மோதினாரா அல்லது திட்டமிட்டு மோதினாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலர் நீதிபதி மீது மோதிய பைக் நபருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மனித தன்மையே இல்லாமல் ஒரு ஜட்ஜ் மீது மோதிவிட்டு அவருக்கு என்ன ஆயிற்று என்று கூட பார்க்காமல் பைக்கை எடுத்துச் சென்றிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.