ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder (CS- GTAW +SMAW, SS-GTAW +SMAW, CS & SS- GTAW +SMAW, Alloy (P92 & p91) −GTAW+ SMAW, Duplex & Super Duplex- GTAW +SMAW), Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder (AG4 &AG7) /Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை, Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ.51,000/- வரை Piping Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Structure Fabricator ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Millwright Fitter ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை மற்றும் Piping Fireman ரூ. 53,000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள் யார் தெரியுமா? பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய குடும்பம்..!
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் ovemcInm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9