கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!

  இந்தியாவில் ஏராளமான மக்கள் கேபிள் டிவி தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் மிக குறைந்த நபர்கள் மட்டும் இன்டர்நெட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேபிள்…

jio

 

இந்தியாவில் ஏராளமான மக்கள் கேபிள் டிவி தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் மிக குறைந்த நபர்கள் மட்டும் இன்டர்நெட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேபிள் டிவிக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய திட்டத்தை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ரூபாய் 3333 மற்றும் ரூபாய் 4444 என இரண்டு திட்டங்களை ஜியோ ஏர் பைபர் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் இன்டர்நெட் வேகம் மற்றும் ஒரு டிபி வரை டேட்டாவை வழங்குகின்றன.

ரூபாய் 3333 திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார், Sony Live, ஜி5 சினிமா, சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட பிரபலமான ஓடிடி தளங்களும், அதுமட்டுமின்றி டிஸ்கவரி ப்ளஸ் உள்பட பல ஓடிடி தளங்களும் இலவசமாகவே கிடைக்கும். தனித்தனியாக ஒவ்வொரு சேனல்களையும் நாம் சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதே நேரத்தில், ரூபாய் 4444 திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் பிளான், அமேசான் ப்ரைம் லைட் ஆகியவை கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்பிளிக்ஸ் செய்ய வேண்டும் என்றால் மாதம் 200 ரூபாய் ஆகும் என்பதும், அமேசான் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்றால் வருடத்திற்கு 1500 ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலாக இந்த ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் அனைத்து சேனல்களும் இலவசமாக கிடைக்கும் என்பதால், இந்த திட்டம் பொது மக்களுக்கு பயனையும் அதே நேரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நஷ்டத்தையும் தரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ரூபாய் 444 திட்டத்தில் இணைந்தால் 800க்கும் மேற்பட்ட சேனல்கள் கிடைக்கும் என்பது பொதுமக்களுக்கு ஒரு மிகப்பெரிய சலுகை ஆகவே பார்க்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.