இயற்கை ஏற்படுத்திய பேரழிவுகளில் பல ஆண்டுகள் தாண்டியும் நம் மனதில் நிலைத்து இருக்கும் ஒன்று சுனாமி பேரலைத் தாக்குதல்.
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் ஏற்படுத்திய மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றுதான் சுனாமி அலைத் தாக்குதல்.
இந்தியப் பெருங்கடல் ஓரத்தில் அமைந்திருந்த ஏறக்குறைய 14 நாடுகளில் பாதிக்கப்பட்டது, மேலும் இந்த சுனாமித் தாக்குதலில் மொத்தமாக 230,000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பானில் மூன்று மீட்டர் உயரம் வரையிலான கடல் அலைகள் எழுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள வடக்கு ஹொக்கைடோ தீவில் உள்ள கிழக்குக் கரைகள் மற்றும் வாகயாமாவின் தென் மேற்குப் பகுதிகளில்தான் அலையின் உயரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அலைத் தாக்குதலில் இருந்து மக்களை காக்க எண்ணி ஹொக்கைடோ தீவில் உள்ள கிழக்குக் கரைகள் மற்றும் வாகயாமாவின் தென் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுனாமி அலை எச்சரிக்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியினையே ஏற்படுத்தியுள்ளது.