இனி வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை.. 2025 முதல் அமலுக்கு வரப்போகும் திட்டம் எங்க தெரியுமா?

பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும் உலகின் வல்லரசு நாடுகளில் பட்டியலில் ஜப்பானுக்குத் தனி இடம் உண்டு. ஜப்பானியர்களின் சுறுசுறுப்பு, வேலை செய்யும் ஆற்றல் போன்றவை மிகப்பெரிய அணுக்கதிர்வீச்சு குண்டு வெடிப்பிலிருந்தும் அந்நாட்டினை மிக விரைவில்…

Japan

பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும் உலகின் வல்லரசு நாடுகளில் பட்டியலில் ஜப்பானுக்குத் தனி இடம் உண்டு. ஜப்பானியர்களின் சுறுசுறுப்பு, வேலை செய்யும் ஆற்றல் போன்றவை மிகப்பெரிய அணுக்கதிர்வீச்சு குண்டு வெடிப்பிலிருந்தும் அந்நாட்டினை மிக விரைவில் மீட்டு உலக வல்லரசுகள் பட்டியலில் இணைத்தது.

பொதுவாகவே ஜப்பானியர்கள் மீக நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். காரணம் அவர்களின் உணவு முறை, வாழ்க்கை முறை. எங்கு சென்றாலும் அதிகமாக சைக்கிளைப் பயன்படுத்துவது என ஆரோக்கியப் பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் சராசரி இறப்பு வயதே 70-ஐத் தாண்டுகிறது. இதனால் உலகில் அதிக முதியோர்கள் வாழும் நாடு என்ற பெயரையும் பெற்றிருக்கிறது ஜப்பான்.

இவ்வாறு ஜப்பானில் இளைஞர்களைக் காட்டிலும் முதியோர் விகிதம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டின் இளைஞர் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த தலைமுறையில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும் என்பதால் ஜப்பானிய அரசு மக்கள் தொகையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட டேட்டிங் ஆப், 2 குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கு ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கி மக்கள் தொகையைக் கூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.. தேடி வந்து பர்சனல் லோன் வழங்கும் எஸ்.பி.ஐ..!

அதன் ஒரு பகுதியாக ஜப்பானில் இனி அரசு அலுவலங்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி என்ற முடிவினை எடுத்துள்ளது ஜப்பானிய அரசு. ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வந்தால் போதும் என்ற நடைமுறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஊழியர்களுக்கு மன அழுத்தம் குறையும். மேலும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பதால் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கலாம். ஊழியர்களும் ஆரோக்கியமாக இருப்பர் என்று இத்திட்டத்தினை அமல்படுத்த உள்ளது ஜப்பான்.