விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிப்போயிருப்பது, திராவிட கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக சிலர் கருதலாம். ஆனால், உண்மையில் இது ஒரு மிகப்பெரிய அரசியல் புயலுக்கான அமைதி என்பதை அவர்கள் உணரவில்லை. தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் அல்லது ஓடிடி தளங்களில் வெளியானால், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும். விஜய்யின் அரசியல் கொள்கைகளையும், தற்போதைய அதிகார வர்க்கத்தின் தவறுகளையும் தோலுரித்து காட்டும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதால், அதன் தாக்கம் தேர்தலின் போது ஒட்டுமொத்தப் பழைய கட்சிகளையும் ‘ஸ்வீப்’ செய்துவிடும் வல்லமை கொண்டது.
தெரிந்தோ தெரியாமலோ, தணிக்கை வாரியம் மூலமாக படத்தை தாமதப்படுத்தி பாஜக அரசு விஜய்க்கு ஒரு வகையில் நன்மையே செய்திருக்கிறது. ஏனெனில், தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் ‘ஜனநாயகன்’ போன்ற ஒரு அரசியல் படம் வெளியாவது, தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு வங்கியை பல மடங்கு உயர்த்த உதவும். “ஏண்டா விஜய்யைத் தொட்டோம்” என்று வருத்தப்படும் அளவிற்கு படத்தின் வசனங்களும், அதில் முன்வைக்கப்படும் அரசியலும் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நடிகரின் படமாக மட்டுமல்லாமல், ஒரு மாற்று அரசியலுக்கான பிரகடனமாகவே பார்க்கப்படுகிறது.
அதேசமயம், விஜய், என்.டி.ஏ கூட்டணியில் சேருவார் என்று எவரேனும் கனவு கண்டால் அது வெறும் ஏமாற்றத்தில்தான் முடியும். விஜய் தனது கொள்கையில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவர் திராவிட மாடலுக்கும் சரி, ஆரிய மாடலுக்கும் சரி, ஒரு பொதுவான மாற்றாகவே தன்னை முன்னிறுத்துகிறார். “மிரட்டினால் பணிய இது ஒன்றும் சுயநலத்திற்காக இயங்கும் திராவிட கட்சிகள் அல்ல” என்பதை விஜய் தனது ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்து வருகிறார். தவெக என்பது கொள்கையாலும், தொண்டர்களின் பலத்தாலும் உருவான ஒரு தனித்துவமான இயக்கம்.
விஜய்யின் இந்த பயணம் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் தொடங்கப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் கட்சிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு புரட்சி. ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது என்பது எதிரிகளுக்கு கிடைத்த ஒரு சிறிய ஓய்வு இடைவெளிதான். ஆனால், படம் வெளியாகும் போது அந்த திரையரங்குகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் மேடையாக மாறும். திராவிட கட்சிகளின் ஊழல்களையும், மத்திய அரசின் போலி வாக்குறுதிகளையும் மக்கள் இந்த படத்தின் மூலமாக ஒப்பிட்டு பார்த்துத் தெளிவு பெறுவார்கள்.
டிஜிட்டல் யுகத்தில் விஜய்யின் செல்வாக்கை எத்தகைய தணிக்கை முறையாலும் தடுத்துவிட முடியாது. ஒருவேளை திரையரங்குகளில் தடை விதிக்கப்பட்டால் கூட, ஓடிடி வழியாக தவெகவின் கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் சென்று சேரும். தமிழக வெற்றி கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஏற்கெனவே களத்தில் இறங்கிவிட்டனர். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில், கொள்கைக்காக தன்னலமின்றி உழைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை விஜய் திரட்டி வைத்துள்ளார். இது மற்ற கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய அச்சத்தைத் தந்துள்ளது.
முடிவாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும். “தவெகடா…” என்று சொல்லும் போது ஒரு தொண்டனின் குரலில் இருக்கும் அந்த திமிர், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையிலிருந்து உருவானது. விஜய் தனது மௌனத்தின் மூலமே எதிரிகளுக்கு பதிலளித்து வருகிறார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெடிக்கும் ஒரு அரசியல் அணுகுண்டாக இருக்கும். தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பு, யாரை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்தார்களோ, அவர்களுக்கே ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
