கொரோனாத் தொற்றானது 2019 ஆம் ஆண்டு துவங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து பரவி வருகின்றது. கொரோனாத் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கானது உலக நாடுகள் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கின் ஒரு கட்டமாக வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் என பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே அடைந்து வேலைபார்க்கும் ஊழியர்கள் தற்போது மீண்டும் நிறுவனங்களுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
வொர்க் ஃப்ரம் ஹோம் முறை துவக்கத்தில் கடுமையானதாக ஐடி ஊழியர்களால் பார்க்கப்பட்டாலும், அதன்பின்னர் ஊழியர்கள் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டனர்.
ஊழியர்கள் பேருந்து உட்பட எந்தவொரு செலவும் செய்யாமல் சம்பளத்தை சேமித்து வைத்து இருந்தனர். இரண்டு ஆண்டுகளில் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மூன்று அலைகளில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கடைகள், ஹோட்டல்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்தும் தற்போதும் துவங்கிவிட்டன.
இதனைத் தொடர்ந்து ஐடி ஊழியர்களையும் பணிக்குத் திருப்பி அழைத்துள்ளனர். இதனால் ஐ.டி. ஊழியர்கள் நிறுவனங்களுக்குத் திரும்ப இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிறுவனங்கள் களை கட்டத் துவங்கி வருகின்றது.