இஸ்ரோ வேலையில் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து விலகி தொழிலதிபரான நிலையில், தற்போது அவர் வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் எம்பில் பிஹெச்டி படித்து இஸ்ரோவில் பணிபுரிந்தார். சாட்டிலைட்டில் எரிபொருள் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணிக்கும் பிரிவில் இருந்தார் என்பதும், ஏழு வருடங்கள் அங்கு வேலை பார்த்த நிலையில், ஒரு கட்டத்தில் தினமும் வேலைக்கு சென்று வருவது போரடித்ததால், வேலையிலிருந்து விலகினார்.
அதன் பிறகு, அவர் தனது நண்பர்களின் உதவியுடன் எஸ்டி கேப்ஸ் என்ற டாக்ஸி சர்வீஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். சுகுமாரன் மற்றும் துளசி என்ற தந்தை-தாயின் பெயரின் முதல் எழுத்துகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த டாக்ஸி சர்வீஸ், ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும், அதன் பிறகு நல்ல வரவேற்பு பெற்றது.
ஒரு டாக்ஸியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% தனக்கு என்றும் 30% டிரைவருக்கு என்றும் அவர் லாபத்தை பிரித்து கொடுத்தார். இதன் காரணமாக டிரைவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சவாரிகளை ஏற்றி, வருமானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டார்கள். தற்போது, அவருடைய நிறுவனத்தில் 37 கார்கள் இயங்கி வருவதாகவும், இதன் மூலம் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு என்பது உத்தரவாதம் இல்லாத நிலையில், சொந்த தொழில்தான் சிறந்தது என்பதை நிரூபிக்கும் இன்னொரு உதாரண நிகழ்வு தான் உதயகுமாரின் வாழ்க்கை என்பது குறிப்பிடத்தக்கது.