ISB முன்னாள் மாணவர்கள் ஆரம்பித்த சிங்கிள் குரூப்.. 3 நிபந்தனைகள்..!

  இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து “சிங்கிள் குரூப்” என்று ஆரம்பித்த நிலையில், இந்த குரூப்பில் இணைய வேண்டும் என்றால் மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

isb

 

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து “சிங்கிள் குரூப்” என்று ஆரம்பித்த நிலையில், இந்த குரூப்பில் இணைய வேண்டும் என்றால் மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்வி நிலையத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் திருமணம் செய்யவும் மற்றும் பெண் நண்பர்களை பெறுவதற்காகவே “சிங்கிள் குரூப்” ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த குரூப்பில் சேர வேண்டும் என்றால் மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை திருமணம் செய்யாதவர்கள் மற்றும் காதலிக்காதவர்கள் மட்டுமே இந்த குரூப்பில் சேர தகுதியுள்ளவர்கள். உடனடியாக திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த குரூப்பில் சேர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் சேர்ந்த பின்னர், அவர்களுக்கு துணையாக கேர்ள் பிரண்ட் அல்லது திருமணம் நடந்துவிட்டால் உடனடியாக இந்த குரூப்பிலிருந்து விலகிவிட வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த குரூப்பில் சேர்ந்தவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள் என்றும், குரூப்பில் சேர்ந்த சில சில நாட்களிலேயே அவர்களுக்கு கேர்ள் பிரண்ட் அல்லது திருமணம் ஆகிவிடுவதால், இது ஒரு “ராசியான குரூப்” என்றும், இந்த குரூப்பில் சேர்ந்தால் உடனடியாக தங்களுக்கு துணை கிடைக்கும் என்றும் பலர் கூறுகிறார்கள்.

தற்போது, இந்த குரூப் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும், பல இளைஞர்கள் இந்த குரூப்பில் சேர ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Image