எங்களால் இங்க இருந்துகிட்டே வாஷிங்டனையும் தாக்க முடியும்.. முதல்முறையாக ஈரான் பயன்படுத்திய ‘செஜ்ஜில்’ ஏவுகணை.. 2000 கிமீ தூரம் வரை டான்ஸ் ஆடிக்கொண்டே போய் துல்லியமாக தாக்கும்.. எங்க அணுசக்தி நிலையத்துல நீங்க கை வச்சா… உங்க அதிகார மையத்துல நாங்க வெடி வைப்போம்! மூணு வாரமா பொறுமையா இருந்தது பயத்துல இல்ல… சரியான நேரத்துல ‘செஜ்ஜிலை’ இறக்கி சரித்திரம் படைக்கத்தான்! ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறது அமெரிக்கா ஸ்டைல்னா… போட்ட ஸ்கெட்ச்சையே கிழிச்சுட்டு வர்றது ஈரான் ஸ்டைல்!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் மேகங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரான் தனது உள்நாட்டிலேயே…

sejjil

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் மேகங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரான் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘செஜ்ஜில்’ ஏவுகணைகளை முதல் முறையாக போர்க்களத்தில் ஏவியுள்ளது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து இதுவரை பயன்படுத்தப்படாத இந்த ஏவுகணை, தற்போது ஜெருசலேம் மற்றும் வாஷிங்டன் தொடர்புடைய இலக்குகளை தாக்க பயன்படுத்தப்பட்டதாக ஈரானின் முக்கிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

செஜ்ஜில் ஏவுகணை என்பது ஈரானால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு நிலைகளை கொண்ட, திட எரிபொருளால் இயங்கும் ஒரு அதிநவீன ஏவுகணையாகும். இது நடுத்தர தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை வகையை சார்ந்தது. சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஏறத்தாழ 700 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. ஈரானின் பழைய திரவ எரிபொருள் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, திட எரிபொருள் ஏவுகணையான செஜ்ஜிலை மிக விரைவாக தயார் செய்து ஏவ முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். இது எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணையை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான கால அவகாசத்தை குறைக்கிறது.

இந்த ஏவுகணைக்கு (Dancing Missile என்ற சுவாரஸ்யமான புனைபெயரும் உண்டு. மிக அதிக உயரத்தில் பறக்கும்போதும், எதிரிகளின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை ஏமாற்றும் வகையில் தனது திசையை மாற்றும் திறன் கொண்டிருப்பதாலேயே இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயன் டோம்’ போன்ற பாதுகாப்பு வளையங்களை கூட ஊடுருவி செல்லும் ஆற்றல் இதற்கு இருப்பதாக கருதப்படுகிறது. சுமார் 18 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்படும்போது 23,600 கிலோகிராம் எடையை கொண்டிருக்கும் என்று சர்வதேச ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.

செஜ்ஜில் ஏவுகணை திட்டத்தின் வரலாறு 1990-களின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. 2008-ஆம் ஆண்டில் இதன் முதல் சோதனை நடத்தப்பட்டபோது அது 800 கிலோமீட்டர் தூரம் வரை வெற்றிகரமாக பயணித்தது. பின்னர் 2009-ல் நடந்த சோதனையில் அதன் வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. ஈரானிய ராணுவம் இந்த ஏவுகணையின் பல்வேறு பதிப்புகளை 2, உருவாக்கி வருவதாகவும், இவை ஒவ்வொன்றும் முந்தையதை விட அதிக தூரம் பாயும் திறன் கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது போர்க்களத்தில் இதன் பயன்பாடு ஈரானின் ராணுவ பலத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த மாதம் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த போர் தீவிரமடைந்துள்ளது. இதற்கு ஈடாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மும்முனைப் போர் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் 15,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நிலைமையை சமாளிக்க 2,500 கடற்படை வீரர்களுடன் கூடிய போர்க்கப்பலையும் அமெரிக்கா இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்தாலும், அதிநவீன ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் இருதரப்பு ஆவேசமான தாக்குதல்கள் மத்திய கிழக்கை ஒரு நீண்டகால போரை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றன.