இனிமேல் எங்கள் இலக்கு ராணுவ தளங்கள் அல்ல.. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தான்.. மத்திய கிழக்கில் இனி ஒரு அமெரிக்கா வங்கி கூட இருக்காது.. எல்லாத்தையும் குண்டு போட்டு அழிச்சிடுவோம்.. ராணுவ நிலைகளை அடிக்கிறது பழைய ஸ்டைல்… இப்போ உங்க பேங்க் ‘சர்வர்’களைத் தூக்குறது தான் எங்களோட புது ஸ்டைல்! அமெரிக்க வங்கிகள் காலியானால், அமெரிக்க பொருளாதாரமே குளோஸ்.. இப்போ விடுத்திருக்கிறது எச்சரிக்கை மட்டும் இல்ல… வெளியேறுறதுக்கான கடைசி வாய்ப்பு! ஈரான் ஆவேசம்..!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, வளைகுடா பிராந்தியத்தில் இயங்கி வரும் அமெரிக்க வங்கி கிளைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் வங்கி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும்…

usa banks

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, வளைகுடா பிராந்தியத்தில் இயங்கி வரும் அமெரிக்க வங்கி கிளைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் வங்கி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க நிதி நிறுவனங்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஈரானிய வங்கி சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் அந்த நாடுகளில் வங்கி செயல்பாடுகளை முடக்கியுள்ளன.

எதிரிகள் மீண்டும் இதே போன்ற தவறை செய்து ஈரானிய வங்கிகளை தாக்கினால், மத்திய கிழக்கு, வளைகுடாவில் செயல்படும் அனைத்து அமெரிக்க வங்கி கிளைகளும் ஈரானின் நியாயமான இலக்குகளாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சிவில் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ‘அதே பாணியில் பதிலடி’ கொடுப்போம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ள பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று ஈரானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஒரு நேரடி இராணுவ மோதலிலிருந்து பொருளாதார மற்றும் சிவில் கட்டமைப்புகளை சிதைக்கும் ஒரு புதிய போராக உருவெடுத்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ஈரானின் மிகப்பெரிய மற்றும் பழமையான வங்கியான Bank Sepah உள்ளிட்ட இரண்டு வங்கிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் பல மணிநேரம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வங்கிச்சேவைகளை முடக்கியுள்ளன. சிவில் உள்கட்டமைப்புகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஈரானியர்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கவும், அதன் மூலம் அந்நாட்டு மக்களிடையே உள்நாட்டு அதிருப்தியை உருவாக்கவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதுவதை விட, பொருளாதார ரீதியாக மக்களை பாதிப்படைய செய்யும் தந்திரத்தை எதிரிகள் கையில் எடுத்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.

இந்தப் போர் இப்போது இராணுவ இலக்குகளை தாண்டி, இரு நாடுகளின் பொருளாதார மையங்களை நோக்கி நகர்ந்துள்ளது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. குறிப்பாக, நிதி நிறுவனங்கள், வங்கிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரானை ஒரு தற்காப்பு நிலையில் இருந்து ஆக்கிரமிப்பு நிலைக்கு தள்ளியுள்ளன. ஈரானின் பதிலடி என்பது வெறும் ஏவுகணைகளுடன் நின்றுவிடாமல், உலகளாவிய பொருளாதாரத்தின் நரம்பு மண்டலமான வங்கி மற்றும் நிதித்துறையை தாக்குவதாக அமைந்துள்ளது. இது தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் வெளியேறக்கூடும், இது அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த அதிகார போட்டி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன.