வானத்தையே வளைச்சு பிடிப்போம்னு சொன்ன அமெரிக்காவின் ‘தாட்’ தொழில்நுட்பம் இப்போ தரைமட்டமாகி கிடக்குது! ஈரானோட ஏவுகணைக்கு முன்னாடி எந்த கவசமும் எடுபடாது! ஆனா உங்க கண்ணு முன்னாடியே வந்து உங்க ரேடாரை உடைச்சிருக்கோம்! ஹார்முஸ் நீரிணை எங்களோட எல்லை… அங்க வர்ற கப்பல் எதுவா இருந்தாலும் அது எங்களுக்கு வெறும் இலக்குதான்! மூணு டேங்கர் கப்பலை தட்டிட்ட்டோம்… இன்னும் தட்டுவோம்.. ஈரான் சவால்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக தீவிரமாக சூழ்ந்துள்ளன. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான மோதல் ஒரு முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது.…

ship

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக தீவிரமாக சூழ்ந்துள்ளன. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான மோதல் ஒரு முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ருவைஸ் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு ரேடார் அமைப்பை தாக்கி அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. வான்வழி தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்ட இந்த ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டது, அமெரிக்காவின் தற்காப்பு அரணில் விழுந்த ஒரு பெரிய விரிசலாக கருதப்படுகிறது.

ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தாக்குதல் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘தாட்’ என்பது எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்ட உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். இத்தகைய உயர்தொழில்நுட்ப அமைப்பை ஈரான் தகர்த்துள்ளது, அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரைவழி இலக்குகளை தாண்டி, கடல் வழி விநியோக வழித்தடங்களிலும் ஈரான் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை அருகே, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச எரிசக்தி சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. இந்த கப்பல் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றதற்கான நேரடி பதிலடியாக பார்க்கப்படுகிறது. கமேனியின் மறைவுக்கு பிறகு பொறுப்பேற்றுள்ள ஈரானின் புதிய ராணுவ தலைமை, தங்களின் தாக்குதல் வீரியம் குறையாது என்பதை உலகிற்கு உணர்த்த இத்தகைய அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் தங்கள் மண்ணில் அமெரிக்க தளங்களை அனுமதிக்கக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கையையும் ஈரான் இதன் மூலம் விடுத்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ மூலம் ஈரானை தொடர்ந்து தாக்கி வருகிறார். ஈரானின் 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா ஏற்கனவே தரைமட்டமாக்கியுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு பற்றியோ, நீரிணை மூடப்படுவது பற்றியோ எங்களுக்கு கவலையில்லை” என்று டிரம்ப் கூறியுள்ளது, அமெரிக்கா இந்த போரை இறுதிவரை கொண்டு செல்ல தயாராக இருப்பதையே காட்டுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சமரசத்திற்கு இடமில்லாத வகையில் நேருக்கு நேர் மோதி வருவது உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. துபாய் மற்றும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டாலும் இந்திய பங்குச்சந்தை மூடப்படவில்லை என்பதால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது,

அமெரிக்காவின் ‘தாட்’ ரேடார் சிதைக்கப்பட்டது உண்மையானால், அது போரின் போக்கை ஈரானுக்கு சாதகமாக மாற்றக்கூடும் அல்லது இன்னும் கடுமையான அமெரிக்க தாக்குதல்களுக்கு வழிவகுக்கும்.