அமெரிக்காவின் முன்னணி ஊடகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஐபோன் முழுவதுமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படுமானால், விலை 3,500 டாலர்கள் இந்திய மதிப்பி சுமார் ரூ.3 லட்சம் ஆக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தற்போது iPhone-ஐ 1,000 டாலருக்குள் வாங்க முடிகிறது. அமெரிக்காவில் தொழிற்சாலை அமைப்பதும், இயங்கவைக்கும் செலவும் மிகவும் அதிகம் என்பதே இதற்குக் காரணம் என ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளது..
ஆப்பிள் நிறுவனம் தனது சப்ளை பொருட்களை குறைந்தபட்சம் 10% ஐ அமெரிக்காவிற்கு உற்பத்தி செய்ய முடிவு செய்தால் அதற்கே 30 பில்லியன் டாலர் செலவாகும், மேலும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும். புதிய தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் ஆரம்ப நிலைமையிலிருந்து உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆப்பிள் ஐபோனை பொருத்தவரை சிப்கள் தைவான் நாட்டிலும், ஸ்க்ரீன்கள் தென்கொரியா நாட்டிலும் மற்ற பொருட்கள் சீனாவிலும் உற்பத்தி செய்து வாங்குகிறது. குறிப்பாக சீனாவில் ஐபோனின் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு முழு போனாக உருவாக்குகிறது. இவையெல்லாம் அமெரிக்காவில் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல.
புதிய வரிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஆப்பிளின் பங்குகள் 25% வீழ்ந்துள்ளன. முழுமையான உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றாத நிலையில் இருந்தாலும், இறக்குமதி உதிரி பாகங்களின் மீதான அதிக வரி, 43% வரை விலை உயர்வை ஏற்படுத்தலாம். இதை சமாளிக்க ஆப்பிள் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற குறைந்த வரியுள்ள நாடுகளுக்கு உற்பத்தியை மாற்ற முயலும்.
உற்பத்தி வெளிநாட்டிலேயே தொடர்ந்தாலும் கூட, உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. இதனால், புதிய iPhone மாடல்களின் விலை பெரிதும் உயர வாய்ப்பு உள்ளது. முடிவில், ஐபோன் என்பது அனைவரும் வாங்கக்கூடிய சாதனம் இல்லாமல் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் கருவியாக மாறும் அபாயம் அதிகம் உள்ளது.