ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது பதிவில் 25 லட்சம் சம்பளம் தனக்கு போதவில்லை என பதிவு செய்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் அந்த பதிவுக்கு கமெண்ட்கள் மூலம் வறுத்து எடுத்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் சௌரவ் தத்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருடத்திற்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் தனக்கு குடும்ப செலவுகளை தாராளமாக செலவு செய்ய முடியவில்லை என்றும் சேமிப்புக்கு என மிச்சப்படுத்த முடியவில்லை என்றும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு வருடத்திற்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் என்றாலும் மாதம் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் மட்டுமே கையில் வருகிறது என்றும் அதில் ஒரு லட்ச ரூபாய் இஎம்ஐ மற்றும் வீட்டு வாடகைக்கு சென்று விடுகிறது என்றும் மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாயில், 25 ஆயிரம் ரூபாய் ஹோட்டலில் சாப்பிடுவது, திரைப்படங்கள் செல்வது, ஓடிடி, வெளியூர் செல்வது என செலவாகி விடுகிறது என்றும், 25 ஆயிரம் ரூபாய் எமர்ஜென்சி மற்றும் மெடிக்கல் செலவுக்கு சென்று விடுகிறது என்றும் ஒரு ரூபாய் கூட தன்னால் முதலீடு செய்ய முடியவில்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாதம் 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் செய்யக்கூடியவர்கள் கூட தங்களால் முடிந்த அளவு சேமித்து வருகிறார்கள் என்றும், ஆனால் ஒன்றரை லட்சம் மாத சம்பளம் வாங்கும் உங்களால் சேமிக்க முடியவில்லை என்றால் அது உங்களது தவறு என்றும் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர் உங்களுக்கு ஒன்றரை லட்சம் இல்லை, 5 லட்சம் சம்பளம் வந்தால் கூட உங்களால் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது என்றும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்றும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.