தெரியாமல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டேன், திரும்ப கொடுக்க முடியுமா?

  இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது இந்தியாவை பொருத்தவரை அதிகமாகி வருகிறது என்பதும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தாலும், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் வலுக்கட்டாயமாக சில பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் திணித்து விடுவதாக குற்றச்சாட்டு…

insurance

 

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது இந்தியாவை பொருத்தவரை அதிகமாகி வருகிறது என்பதும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தாலும், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் வலுக்கட்டாயமாக சில பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் திணித்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், “பாலிசி தெரியாமல் எடுத்து விட்டேன்; அதை திரும்ப ஒப்படைக்க முடியுமா?” என்று பலர் சந்தேகம் கேட்கிறார்கள். அது எந்த வகையில் சாத்தியம் என்பதை தற்போது பார்ப்போம்.

ஒரு பாலிசி எடுத்த பிறகு, அந்த பாலிசி தனக்கு வேண்டாம் என்பதுடன் ஏதாவது ஒரு காரணத்தினால் அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களுக்கு, சில குறிப்பிட்ட காலத்தை பாலிசி நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அபராதம் இல்லாமல் பாலிசி ரத்து செய்யும் அந்த காலம் பிரீ லுக் பீரியட் என்று அழைக்கப்படுகிறது.

ஏஜென்ட் மூலம் பாலிசி எடுத்திருந்தால்: 15 நாட்கள், ஆன்லைன் மூலம் பாலிசி எடுத்திருந்தால் 30 நாட்கள் என கால அவகாசம் உள்ளது. இந்த காலத்திற்குள் பாலிசியை திரும்ப ஒப்படைத்தால், எந்த விதமான அபராதமும் இல்லாமல் நம்முடைய பணம் கிடைத்துவிடும்.

ஆனால், பாலிசி எடுத்துவிட்டு ஒரு சில ஆண்டுகள் கழித்து அந்த பாலிசி வேண்டாம் என்று முடிவு செய்தால், சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது. அதே நேரத்தில், பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் நாம் கட்டிய பணம் எதுவும் கிடைக்காது என்ற விதி இருந்தது.

தற்போது, ஒரே ஒரு ஆண்டு பிரீமியம் கட்டியிருந்தாலும் சரண்டர் மதிப்பு வழங்க வேண்டும் என இந்திய காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு சரண்டர் செய்ய விரும்புவோர், தங்களின் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இருப்பினும், ஒரு பாலிசி எடுக்கும் முன், இந்த பாலிசி நமக்கு சரியானதா? அதற்குரிய ஆண்டுகள் கட்ட முடியுமா? என முழுமையாக ஆலோசித்த பின்னரே பாலிசி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.