இன்சூரன்ஸ் பாலிசி என்பது முதலீடு கிடையாது.. இந்த ஒரு தப்பை மட்டும் செய்ய வேண்டாம்..!

By Bala Siva

Published:

 

இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஒரு நல்ல முதலீடு என்றும் வருமானமும் கிடைக்கிறது என்ற ரீதியில் பலர் பாலிசி எடுத்து வருகிறார்கள் என்றும் இது முற்றிலும் தவறு என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்சூரன்ஸ், முதலீடு ஆகிய இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்றும் இன்சூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க நமக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் நம்முடைய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் உள்ள திட்டம் மட்டுமே என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது அதை ஒரு முதலீடாக கருதாமல், நம்முடைய குடும்பத்திற்கு தேவையான ஒரு தொகை என்பது கருதி தான் அதில் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும், இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் சில தவறுகளை செய்வது உண்டு. குறிப்பாக, பாலிசியை இடையில் கட்டாமல், அந்த பாலிசி காலாவதி ஆகிவிட்டால், அந்த பாலிசியின் நோக்கமே பாழாகிவிடும் என்பதை அடுத்து பாலிசியை எடுத்தவர்கள் நிச்சயமாக தொடர்ந்து கட்ட வேண்டும் என்பது முக்கியம்.

அதேபோல், பாலிசியை வைத்து பணம் அடமானம் பெறுவதும் மிகப்பெரிய தவறு என்று கூறப்படுகிறது. பணம் மிகவும் எளிதில் கிடைக்கிறது என்றும், வட்டியும் குறைவாக இருக்கும் என்பதாக, பாலிசி மீது பலர் லோன் வாங்கி விடுகின்றனர். ஆனால், அந்த லோன் முடிவதற்குள் பாலிசிதாரர்களுக்கு அசம்பாவிதம் நடந்து விட்டால், முழு லோன் தொகையும் கழித்து விட்டு தான் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்கும் என்பதால், பாலிசி மீது லோன் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

எனவே, பாலிசியை அடமானம் வைத்து கடன் வாங்குவது, பாலிசியை சரியாக  கட்டாமல் இருப்பது என இந்த இரண்டு தவறையும் செய்யாமல் இருப்பது தான் பாலிசியின் உண்மையான பலன் கிடைக்க உதவும் வகையில் இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.