இன்சூரன்ஸ் பாலிசி எத்தனை வயது வரை எடுத்தால் போதும்? ஓய்வுக்கு பின் சிக்கலில் மாட்ட வேண்டாம்..!

By Bala Siva

Published:

 

ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும் போது, இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் பொதுவாக 85 வயது வரை பாலிசி எடுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், ஒருவர் ஓய்வு பெறும் வயது வரை பாலிசி எடுத்தால் போதும் என்றும், அதற்கு மேல் பாலிசி எடுத்தால் பாலிசி பிரீமியம் கட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது, உங்கள் வயது எவ்வளவு, எத்தனை வயது வரை உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் இருப்பார்கள் என்பதை அடிப்படையாக வைத்து பாலிசி காலத்தை முடிவு செய்ய வேண்டும். பணி ஓய்வு காலம் வரை ஆயுள் காப்பீடு தான் பலரும் விரும்புவார்கள். ஓய்வு காலத்திற்கு பின் பாலிசி பிரீமியம் கட்டுவதில் சிரமம் இருக்கும் என்பதால், அந்த முடிவை எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சிலருக்கு தாமதமாக திருமணம் ஆகி, தாமதமாக குழந்தை பிறந்திருந்தால், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி வருமானம் பார்க்க சில ஆண்டுகள் தாமதமாகும். அவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 70 வயது வரை பாலிசி எடுத்துக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் பொதுவாக 60 முதல் 65 வயது வரை பாலிசி எடுத்துக் கொண்டால் போதும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உங்களை சார்ந்த உங்கள் குடும்பத்தினர் எத்தனை வயது வரை இருப்பார்கள் என்பதை கணக்கிட்டு பாலிசியின் கால அவகாசத்தை முடிவு செய்ய வேண்டும். 85 வயது வரை பாலிசி எடுத்துவிட்டு, இடையில் சில பிரச்சனைகளால் கட்ட முடியாமல் விட்டால், பாலிசிகளால் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, பாலிசி எடுக்க முன்பு, எத்தனை வயது வரை பாலிசி எடுக்க வேண்டும் என்பதை ஆலோசனை செய்து, குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Tags: age, insurance, policy