லைக் செய்யும் பணியை அவர் தொடங்கிய பின்னர், அவரது கணக்கில் சில ஆயிரங்கள் வருமானமாக வந்ததாக காண்பிக்கப்பட்டது. இதனால், இந்த வேலை உண்மையானதாக இருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது.
இந்த நிலையில், மோசடிக்காரர்கள் “தங்களுக்கு இன்னொரு நிறுவனம் உள்ளது, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்” என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி, அந்த பெண் தனது வங்கி கணக்கிலிருந்து ₹1.5 லட்சம் அனுப்பினார். உடனடியாக, அவரது முதலீடு லாபம் வீட்டு வகையில் கணக்கில் காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அவர் மேலும் சில தொகைகளை அனுப்பி, மொத்தம் ₹5 லட்சத்துக்கு மேல் செலுத்தினார். ஒரு கட்டத்தில், தனது லாபத்துடன் கூடிய முதலீட்டை எடுக்க முயன்றபோது தான் மோசடிக்கு இரையானதை உணர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார். தற்போது, போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதிக அளவில் நடைபெற்று வரும் இத்தகைய மோசடிகளை தடுக்க, மெட்டா நிறுவனம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.