நகைச்சுவையாக இந்த கருத்து கூறப்பட்டாலும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இந்தியர்கள் பலர் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும் குறிப்பாக சளி, காய்ச்சல் என்றால் உடனே Dolo 650 மாத்திரை தான் பல இந்தியர்களுக்கு ஞாபகம் இருக்கிறது என்றும் இந்த மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் எளிதாக கிடைப்பதால் உடனே வாங்கி போட்டுக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவையாக அவர் கூறினாலும் இதில் உண்மை இருக்கிறது என்றும் Dolo 650 மாத்திரையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் சிறுநீரகம் கல்லீரல் உள்பட பல உறுப்புகள் பாதிப்பு உள்ளாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். ‘ நீங்கள் சொல்வது உண்மைதான், எங்கள் வீட்டில் Dolo 650 மாத்திரை இல்லாத நாளே இருந்தது இல்லை’ என்று ஒருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்
Dolo 650 என்பது பராசிட்டமால் என்ற மருந்தின் பிராண்ட் பெயரே. இது இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கோவிட்-19 பரவிய காலத்தில் தொடங்கி. சளி, தலைவலி, உடல்வலி, காய்ச்சல், தடுப்பூசி பின் ஏற்படும் வலிகள் என பல காரணங்களுக்காக மக்கள் இதை வைத்திருப்பது வழக்கம்.
ஆனால், மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரையை சரியான மேற்பார்வை இன்றி அதிகமாக எடுப்பதை எச்சரித்து வருகின்றனர். ’எந்த ஒரு மருந்துக்கும் எச்சரிக்கைகள் இருக்கின்றன. அதேபோல, பராசிட்டமாலுக்கும் எச்சரிக்கைகள் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அதை வேறெதுவும் இல்லாதது போல எடுத்துக் கொள்கிறோம்,’ என டாக்டர் ராகேஷ் குப்தா என்பவர் தெரிவித்தார்.
’இது ஒரு counter மாத்திரையாக கிடைப்பதால், நாமே டாக்டரிடம் கூட கேட்காமல் எடுத்து விடுகிறோம். ஆனால், அதிகளவில் எடுத்தால் அது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.’
முக்கியமாக, பராசிட்டமால் கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலங்களில், டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மருத்துவ வல்லுநர்கள், ’பராசிட்டமால் மாத்திரையை சுயமாக எடுப்பது இரண்டு நாட்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும். அதன் பிறகு வலி அல்லது காய்ச்சல் தொடருமானால், அது ஒரு அடிப்படை நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும். முறையான சிகிச்சை தேவைப்படும்,’ என எச்சரிக்கின்றனர்.
’தற்காலிக நிவாரணம், ஒரு நோயை அழிப்பதற்கு பதிலாக, அதனை அதிகரிக்க செய்யக்கூடும்,’ என டாக்டர் குப்தா தெரிவித்துள்ளார்.