வெளிநாடு வாழும் இந்தியர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்-இல் முதலீடு செய்ய முடியுமா?

By Bala Siva

Published:

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய மக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டில் பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகையின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நேரடியாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும் நிலையில் அது பற்றி தற்போது பார்ப்போம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதாவது என்.ஆர்.ஐ என்று கூறப்படும் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் இணையதளங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். என்.ஆர்.ஐக்கள் தங்கள்  என்ஆர்ஐ கணக்குகளின் மூலம் இந்தியாவில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியும். ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கா, கனடா உள்பட சில நாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐக்கள், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளது என்றும் இது குறித்து அந்தந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதே நிதிநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.