இந்தியர்கள் குப்பை அள்ளும் வேலையை பார்க்கட்டும்.. டிரம்ப் கூறியதாக பரவும் வீடியோ..!

  அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களை வெளியேற்றுவோம் என்றும், முதலில் இந்தியர்கள் தங்கள் நாட்டின் குப்பைகளை அகற்றும் வேலையை பார்க்கட்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாக ஒரு வீடியோ பரவி வருவது பெரும் பரபரப்பை…

trump2

 

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களை வெளியேற்றுவோம் என்றும், முதலில் இந்தியர்கள் தங்கள் நாட்டின் குப்பைகளை அகற்றும் வேலையை பார்க்கட்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாக ஒரு வீடியோ பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வீடியோ ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றுவது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நிலையில், 1 நிமிடம் 47 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில், அமெரிக்காவில் இந்திய வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்வது குறித்து முதலில் பேசுகிறார். அதன் பின்னர், “இந்தியர்கள் தங்கள் நாட்டில் குப்பையை அகற்றும் வேலையை பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் குப்பைதான் இருக்கிறது. அவர்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. மேலும், அளவுக்கு மீறிய பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை தங்கள் நதிகளில் வீசுகிறார்கள்” என்று கூறுகிறார்.

இந்த வீடியோ சரிபார்க்கப்பட்டபோது, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, YouTube சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோவை வெளியிட்ட சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

https://x.com/PIBFactCheck/status/1897523706941071449