பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராவார். இதனால் ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகவுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமராவது இதுவே முதல்முறையாகும்.
ரிஷி சுனக் இதற்கு முன்பு போரிஸ் ஜான்ஸன் பிரதமராக இருந்த போது நிதியமைச்சராக இருந்துள்ளார். போரிஸ் ஜான்ஸன் பதவி விலகிய நிலையில் அடுத்த பிரமராவதற்கு லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் இடையே கடுமையான போட்டி இருந்தது. அதில் லிஸ் ட்ரஸ் வெற்றிப் பெற்று பிரமராக பதவியேற்றார். இருப்பினும் பதவியேற்ற 45 நாட்களுக்குள்ளாக பல்வேறு விமர்சனங்களால் அப்பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.