இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள Open AI அலுவலகத்தில் சமீபத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் தனது ஒரு மாத அனுபவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏஐ டெக்னாலஜியின் முன்னோடி என்று கூறப்படும் Chat GPT ஐ கண்டுபிடித்தது Open AI நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் ChatGPT தான் தற்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் Open AI நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு இளைஞரின் கனவாக இருக்கும் நிலையில் இந்தியாவை சேர்ந்த பிரணவ் என்பவருக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அவர் தனது ஒரு மாத பணியை முடித்த பின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
Open AI நிறுவனத்தில் ஒரு மாத பணி என்பது நான் நினைத்துப் பார்க்காத அனுபவம் கிடைத்தது, உண்மையில் இங்கு பணிபுரியும் சக ஊழியர்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன், மிகுந்த ஒத்துழைப்பு மற்றும் பணியில் சுறுசுறுப்பு, வேகம், திறமைக்கு மதிப்பு என அனைத்தையும் இந்த ஒரே நிறுவனத்தில் நான் பார்க்கிறேன். இந்த ஒரு மாத அனுபவத்தை கூறுவதற்கு எனக்கு வார்த்தைகளை கிடைக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
பிரணவ் செய்த இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. பிரணவ் என்ற இந்த இளைஞரின் பதிவால் பல இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் உள்ள Open AI நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்ற கனவை உருவாக்கும் என்றும், ம் இந்திய இளைஞர்களின் எதிர்கால கனவுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.