இப்படியும் ஒரு உலக சாதனை.. ஓடிக் கொண்டிருந்த ஃபேனை ஆஃப் செய்ய வாலிபர் எடுத்த ரூட்.. வீடியோ

இந்த உலகத்தில் நாம் இயல்பாக அனைவராலும் செய்ய முடியாத விஷயங்களை தாண்டி வித்தியாசமாக ஏதாவது செய்யும் போது உலக அளவில் சாதனையை மேற்கொண்டு அந்த நபர்கள் கவனத்தை பெறுவார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக பரத…

Fan stopped by tongue guinness record

இந்த உலகத்தில் நாம் இயல்பாக அனைவராலும் செய்ய முடியாத விஷயங்களை தாண்டி வித்தியாசமாக ஏதாவது செய்யும் போது உலக அளவில் சாதனையை மேற்கொண்டு அந்த நபர்கள் கவனத்தை பெறுவார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக பரத நாட்டியம் என்றால் ஒரு ஐந்து முதல் 10 பேர் ஆடுவதை நாம் கவனித்திருப்போம். ஆனால் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் இணைந்து பிரம்மாண்டமாக பரதநாட்டியம் ஆடும் போது அவை கின்னஸ் சாதனை பக்கத்தின் கவனம் பெறுவதுடன் உலக சாதனையை சொந்தமாக்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.

இப்படி பல விஷயங்களை உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்திருந்த நிலையில் அதன் பின்னணி பலரையும் மிரண்டு பார்க்கவும் வைத்துள்ளது.

பேனை இப்படியும் அணைக்கலாமா?

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா (Kranthi Kumar Panikera). இவர் ஓடும் விசிறியை அணைத்து மிக முக்கியமான ஒரு கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். டேபிள் ஃபேனோ அல்லது சீலிங் ஃபேனோ வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது நம் கை விரல்களை வைத்தாலே நிச்சயம் ஏதாவது காயத்தை உருவாக்கி விடும்.

ஆனால் இந்த கிராந்தி குமார் என்ற நபரோ 57 எலக்ட்ரிக் ஃபேனை ஒரே நிமிடத்திற்குள் தனது நாக்கு மூலம் அந்த ப்ளேடை நிறுத்தி அணைத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறியை மிக வேகமாக அதாவது ஒரு நிமிடத்திற்குள் தனது நாக்கின் மூலம் நிறுத்திய அவர் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளதுடன் இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இரும்பு நாக்கு என்னும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் இதற்கெல்லாம் எப்படி பயிற்சி மேற்கொள்வது என்றும் வினோதமான, வேடிக்கையான கமெண்ட்களையும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். யாராவது காலையில் எழுந்திருக்கும் போதே ஒருவர் ஃபேன் பிளேடை தனது நாக்கு மூலம் நிறுத்தினார் என்ற செய்தியை கேட்டால் நம்ப முடியும் அளவுக்கு இருக்கிறதா என்றும் வியந்து போய் குறிப்பிட்டு வரும் நிலையில் இதற்கு முன்பாகவே கிராந்தி குமார் இது போன்ற பல திறமை வாய்ந்த சாகசங்களையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ் அதிகாரி ஆசை

ஆரம்பத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைத்துள்ள கிராந்தி குமார், அதன் பின்னர் தனது கவனம் அனைத்தையும் மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனது திறனை வெளிப்படுத்துவதிலும் காண்பித்துள்ளார்.

பள்ளி காலம் தொடங்கி இது போன்ற வித்தியாசமான திறன்களை வெளிப்படுத்துவதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் கிராந்தி குமார், இதுவரை 300 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.